Last Updated : 11 Aug, 2016 09:51 AM

 

Published : 11 Aug 2016 09:51 AM
Last Updated : 11 Aug 2016 09:51 AM

இதுதான் நான் 38: 28 வயசு 18 மனசு

என்னோட பையன், ‘‘இதுதான் உங்க வீடாப்பா?’’ன்னு கேட்டவுடன், என்னால் பதில் சொல்லவே முடியலை. அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னுகூட தெரியலை. அமை தியா வீட்டுக்குள்ளே வந்தேன். சில சமயத்துல, ‘எனக்குப் பசி இல்லை; தூக்கம் இல்லை’ன்னு சொல்வோமே, அந்த மாதிரிதான் எனக்கு அப்போ இருந்துச்சு. என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு, எதுவுமே புரியாம பையன் கேட்டது மட்டும் ஞாபகத்துக்கு வந்துட்டே இருந்தது. அடுத்த நாளோ, அதுக்கும் அடுத்த நாளோ… சரியா இப்போ ஞாபகத்துல இல்லை. என்னோட அம்மா, அப்போவோட வீட்டு லேர்ந்து முதல்முறையா என் பையனும், ‘அவங்க’களும் இருந்த வீட்டுக்கு முழுமையா தங்கப் போய்ட்டேன்.

ஆழ்வார்ப்பேட்டை எங்க வீட்லேர்ந்து பையன் இருந்த அண்ணா நகர் வீட்டுக்கு மாறிப் போனது எனக்கு என்னவோ சென்னையிலேர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்குப் போன மாதிரி இருந்துச்சு. இனிமேல் அப்பா, அம்மா இல்லாமல் தனியாத்தான் இருக்கப் போறோமான்னு நினைச்சப்போ, ரொம் பவும் மனசு கஷ்டமா இருந்தது. எங்க அப்பா, அம்மாவுக்கு நான் எப்படி முக் கியமோ, அதே மாதிரி என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம்னு மனசுக்கு தோணுன தாலதான் இப்படி பண்ணுணோம்னு மனசு எனக்குள்ளேயே ஆறுதல் சொல்லிக்கிச்சு.

பையன்கூட வீட்டுல இருக்கும்போது ஜாலியா இருக்கும். திடீர்னு சமயத்துல அப்பா, அம்மா வேணும்னு தோணும். இதெல்லாம் எப்படி வார்த்தையில சொல்றதுன்னே தெரியலை. எந்த மாதிரின்னும் விவரிக்க முடியாத ஒரு மனநிலையிலதான் இருந்தேன். படத்துல வர்ற சாமி, ‘‘இதெல்லாம் என்னோட திருவிளையாடல் மகனே”ன்னு டயலாக் சொல்லிட்டு பக்தனோட வாழ்க் கையையே மாத்திடுமே, அந்த மாதிரி ஏதாவது ஒரு மேஜிக் நடந்து எல்லாமே நல்லதா மாறிடக் கூடாதான்னு நினைச்சுப்பேன்.

எனக்கு இப்போ 43 வயது. ஆனா, இப்பவும் 30 வயசுக்கான மெச்சூரிட்டி அளவுதான் இருக்கேன். அவ்வளவுதான் என் அறிவு. பையனுக்காக தனி வீடுன்னு போனப்போ எனக்கு 28 வயசு இருக்கும். அப்போ 18 வயசு மெச்சூரிட்டியோடத் தான் இருந்தேன். பொதுவா, அந்த வயசுல எல்லாரும் எப்படி இருப்பாங்க? நானும் ஒரு சின்ன பையன் மனநிலை யிலதான் அப்போ இருந்தேன். சொந்த வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாம, ஜாலியா இருந்த ஸ்டேஜ் அது. சினிமாவைத் தவிர எதையும் பெருசா யோசிக்கிறதெல்லாம் இல்லை. சினிமான்னா, நம்மை நம்பி நிறைய பணம் போடுறாங்க. நான் எண்டர்டெய்ண்ட் பண்றேன்னு மக்களும் நினைப்பாங்க. அதனால அங்கே பொறுப்புள்ள ஆளா மாறிடுறோம். ஆனா அதே அளவுக்கு, என்னோட வாழ்க்கையைப் பத்தி நான் பெருசா யோசிச்சது இல்லை.

ஆனா, சின்ன வயசுல எல்லாம் நான் ஸ்ட்ராங்கான பையன். எவ்வளவு பெரிய விஷயம்னாலும் அவ்வளவு சீக்கிரம் அழ மாட்டேன். அம்மா, அப்பா திட்டும்போது, ஏன் அடிச்சா கூட அப்படியே நிற்பேன். ஆனா, அதுவே பையனோட வந்த அந்த ஸ்டேஜ்ல, ஏதாவது ஒண்ணுன்னா அடிக்கடி எமோஷனலாக ஆரம்பிச்சேன். உள்ளுக்குள்ள அந்த அளவுக்கு ஒரு ஃபீலிங் போல. அம்மா, அப்பாவைப் பிரிஞ்சு வந்ததுக்கு அப்புறம் நான் அதுவரைக்கும் வாழ்ந்த என்னோட வாழ்க்கையில இப்படி நிறைய மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சுது.

இப்போ கூட மும்பையில் சில பேர், ‘‘என்ன சார்! நீங்க அதிகம் ஜாலியா பேசக் கூட மாட்டேங்கிறீங்க. ஆனா, உங்க படம் மட்டும் மசாலாவா, பொழுது போக்கா, ஜாலியா இருக்கே’’ன்னு கேட்பாங்க. ‘‘நம்மோட கனவுதானேங்க படம். வாழ்க்கையில இருந்த சோகம் போதும். படம் ஜாலியாவே இருக் கட்டும்”னு நினைச்சுப்பேன். இதெல் லாம்தானோ என்னவோ, நான் சோக மான படங்களை அதிகம் பார்க்கிறதே இல்லை.

தனி வீடுன்னு போனதுக்கு அப்புறம் நான்தான் வீட்டோட ஹெட். 28 வயசா இருந்தாலும், மனசு 18 வயசுலேயே இருந்ததாலோ என்னவோ, எல்லாமே புதுசா இருந்துச்சு. ‘என்னது நாம குடும்பத்துக்கு ஹெட்டா?’’ன்னு எனக்கே ஆச்சர்யமா இருந்தது. பயமாவும் இருந்தது.

எப்பவுமே என்னோட நார்மல் வாழ்க்கை காத்துல ஆடுற பட்டம் மாதிரி தான். அந்தப் பயணம் என்னோடது இல்லை. அந்த வாழ்க்கையும் என்னோடது இல்லை. வேற யாரையும் இதுக்குக் காரணமா சொல்ல மாட்டேன். அதுவா நடக்குது.

இன்னைக்கு நான் என் பசங்களிடம், ‘‘நீங்க ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு சொல்றது இல்லை. பெரியவனாகி நல்லா சம்பாரிக்கணும்னும் சொல்றது இல்ல. அதே மாதிரி பயங்கர புத்திசாலின்னு பேர் எடுக்கணும்னும் சொல்றது இல்லை. ‘நல்ல பையன்’னு பேரை மட்டும் எடுத் தாப் போதும்னு சொல்லி வெச்சிருக் கேன். அதுவும் இந்தச் சின்ன வயசுல மட்டும் இல்லை. முப்பது, நாப்பது வயசு லேயும் அதேபோல பேர் எடுக்கணும்னு சொல்லியிருக்கேன். அவங்களுக்கு இந்த வயசுல இதெல்லாம் புரியுதோ, இல்லையோ ஆனாலும் சொல்லிட்டே இருக்கேன். அதையும் அவங்க ஜாலியா இருக்கும்போதுதான் சொல்வேன். அவங்களும் நான் சின்ன வயசுல எப் படி இருந்தேனோ, அதே மாதிரி குழந்தைத்தனமான மெச்சூரிட்டியோடத் தான் இருக்காங்க. அப்படியே இருக் கட்டும்னு நானும் நினைக்கிறேன்.

தனி வீடுன்னு நான் போனப்போ, பையனுக்கு 7 வயசு. அவன் ஸ்கூல் போய்ட்டிருந்தான். ஒருமுறை அவ னோட ஸ்கூல்ல பேரண்ட்ஸ் வரணும்னு சொல்லி அனுப்பினாங்க. நானும், போனேன். எனக்கு அந்த மனநிலை எப்படி இருந்ததுன்னா, ஒரு குழந்தை முதல்முறை டெலிபோன் சத்தத்தை, காரை, டி.வி-யில வர்ற உருவத்தைப் பார்க்குறப்போ என்ன மனநிலையில இருக்குமோ, அந்த மனநிலையிலதான் இருந்தேன். என்னோட ஸ்கூல் நாட்கள்ல என்னோட அப்பா, அம்மாவோடதான் பேரண்ட்ஸ் மீட்டிங் போயிருக்கேன். இப்போ, நான் அ...தே... இடத்துல இருந் தது எனக்கு ரொம்ப புதுசா இருந்தது. இதெல்லாமே ஒரு சைக்கிள். இப்படித் தான் வாழ்க் கைங்கிற விஷயத்தைப் பின்னாடி ரொம்ப நாட்களுக்கு அப்புறம்தான் உணர்ந்தேன்.

முதல்முறையா அம்மா, அப்பாவைப் பிரிஞ்சு ஒரு வாழ்க்கை, தனியா ஒரு வீடு, குடும்பத்தோட ஹெட்டுனு… எல்லாமே புதுசா மாறின அந்த டைம்ல, எதார்த்தமாவே என் கேரியர்ல ஒரு மாற்றம் நடந்துச்சு. அது என்னென்னு அடுத்து சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x