Published : 11 May 2017 07:55 AM
Last Updated : 11 May 2017 07:55 AM
மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு வரும் ரசிகர்களுக்கு விசேஷ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட் களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடக்கிறது. இதில் முதல் கட்டமாக மாவட்டம்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் ரசிகர்கள் எப்போது மன்றத்தில் இணைந்தார்கள், என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட முழு விவரங்களும் உள்ளன. முறையான விவரங்களை அளித்துள்ள ரசிகர்கள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட தலைமை ரசிகர் மன்ற அமைப்பாளர் ராயல் ராஜூ கூறியதாவது: முதல்கட்ட சந்திப்பில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார். 3 நாட்களுக்கு முன்புதான் இதில் கலந்துகொள்வதற்கான அடையாள அட்டையைப் பெற்றோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நாளொன்றுக்கு 3 அல்லது 4 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பைப் போலவே அடுத்த மாதமும் 5 நாட்கள் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அப்போது ரசிகர் மன்ற கிளை மன்றங்கள் மற்றும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
அனைத்து மாவட்ட ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்திக்கும் வரை மாதந் தோறும் 5 நாட்கள் சந்திப்பு தொடரும். இந்த சந்திப்பில் ரசிகர் மன்றம் சார்பில் சமூகப் பணிகளை விரைவு படுத்துவதற் கான ஆலோசனைகளை மாநில ஒருங் கிணைப்பாளர் சுதாகர் ஒருங்கிணைக் கிறார். சந்திப்பில் முக்கியமானதாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT