Published : 06 Nov 2014 02:58 PM
Last Updated : 06 Nov 2014 02:58 PM

அனேகன் ரகசியம்: தனுஷ் பெயரை பரிந்துரைந்த விஜய்

'அனேகன்' கதையை கேட்டுவிட்டு தன்னிடம் தேதிகள் இல்லாததால், தனுஷ் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார் விஜய்.

தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'அனேகன்' படத்தை இயக்கி இருக்கிறார் கே.வி.ஆனந்த். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். நவம்பர் 10ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

'மாற்றான்' படத்திற்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் கே.வி.ஆனந்திடம் விஜய்யை வைத்து படம் இயக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், முழுக்கதை முடிவாகாமல் படம் இயக்குவதில்லை என்பதால் 'அனேகன்' முழுக்கதையையும் 4 மாதங்களில் எழுதி முடித்திருக்கிறார்.

படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், 'ஜில்லா' மற்றும் 'கத்தி' ஆகிய படங்களை ஒப்புக் கொண்டதால் கே.வி.ஆனந்த் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. விஜய் மற்றும் கே.வி.ஆனந்த் இருவருமே வேறு யார் நடித்தால் இக்கதை நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது விஜய், தனுஷ் பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.

தனுஷிடம் கதையைக் கூற, அவருக்கு பிடித்து விட்டு உடனே தேதிகள் ஒதுக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x