Published : 31 Jan 2017 01:09 PM
Last Updated : 31 Jan 2017 01:09 PM
தமிழில் நிவின் பாலி நாயகனாக நடித்துவரும் படத்துக்கு 'ரிச்சி' என தலைப்பிட்டுள்ளது படக்குழு.
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'Ulidavaru Kandanthe' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
நிவின் பாலியுடன் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது 'ரிச்சி' என பெயரிட்டுள்ளார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன், "தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் 'ரிச்சி' படத்தின் கதை நகரும்.
'ரிச்சி' என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துள்ளோம். கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT