Published : 08 Jul 2016 10:39 AM
Last Updated : 08 Jul 2016 10:39 AM

‘கபாலி’க்காக முடியை இழந்தேன்: தன்ஷிகா சிறப்பு பேட்டி

‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ என்று வித்தியாச மானப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தன்ஷிகா. தற்போது ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் அதில் நடித்ததைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்.

‘கபாலி’ படத்தில் முடியெல்லாம் வெட்டி வித்தியாசமாக இருக்கிறீர்களே?

‘கபாலி’யில் லேடி டானாக நடித்திருக்கிறேன். இதற்காக முடியை வெட்டவைத்து எனது கெட்டப்பை மாற்றியது இரஞ்சித் சார்தான். ‘காலக்கூத்து’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இரஞ்சித் சார் என்னை போன் செய்து அழைத்தார். அவரைப் போய் பார்த்தபோது இந்த கதாபாத்திரத்தைப் பற்றி கூறினார். ‘மிகச் சிறந்த கதாபாத்திரம். ஆனால் அதற்காக முடியை வெட்டவேண்டும்’ என்றார்.

‘முடியை வெட்ட வேண்டும்’ என்றதும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு என்னை சமாதானப் படுத்திக்கொண்டு சம்மதித்தேன். 4 நாட்கள் கழித்துதான் அவர் சொன்ன அந்த கதாபாத்திரம், ‘கபாலி’ படத்துக்கானது என்று தெரியவந்தது. ரஜினியுடன் நடிக்கப்போகிறோம் என்று தெரிந்ததும் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

என்னிடம் நிறையப் பேர் “எதற்காக முடியை வெட்டி னாய்? விக் வைத்திருக் கலாமே” என்று கேட்டார்கள். அவர்களிடம் “விக் வைத்து நடித்தால் அது எப்படி யும் காட்டிக் கொடுத்துவிடும். ‘கபாலி’யில் என் கதா பாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானது. அந்த பாத் திரத்துக்காகத்தான் முடியை இழந்தேன்” என்றேன். படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கே அதன் முக்கியத்துவம் தெரியும்.

முடியை வெட்டிக் கொண்டதால் வேறு படங் களின் வாய்ப்பை இழந்தீர்களா?

ரஜினி சாரோடு நடிக்க வேண்டும் என்பது பலருக்கும் உள்ள ஆசை. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த நிலையில் அதை எப்படியாவது தக்கவைத் துக் கொள்ள விரும்பினேன். இடையில் நிறைய படங் கள் வந்தன. ஆனால் அந்தப் படங்களின் மூல மாக கிடைக்கும் பெயரைவிட இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.

ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற என் ஆசை ‘கபாலி’ படம் மூலம் நிறைவேறியுள்ளது. முதல் 2 நாட்கள் ரஜினி சாருடன் நடிப்பது பதற்றமாக இருந்தது. இதைக் கவனித்த அவர், “பயப் படாதீங்க.. நார்மலா இருங்க” என்று என்னை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு இரஞ்சித் சாரும் ஒளிப்பதிவாளர் முரளி சாரும் என் பதற்றத்தைப் போக்குவதற்கு தகுந்தாற்போல் சில காட்சிகளைப் படமாக்கினார்கள். இதனால் நான் இயல்பாக நடிக்கத் தொடங்கினேன்.

‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’ என்று நீங்கள் வித்தியாசமான படங்களாகத் தேர்வு செய்கிறீர்களே?

அதுபோன்ற படங்கள்தான் எனக்கு மிகவும் உத்வேகமளித்தது. பலரும் குறிப்பிட்டு பேசும் படங்களில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். நான் இதுவரை நடித்த படங்களின் வரிசையில் ‘கபாலி’ படமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். எத்தனை படங்களில் நடித்தோம் என்பதை விட எத்தனை நல்ல படங்களில் நடித்தோம் என்பதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும்.

ரஜினியுடன் நடிக்கப் போகிறேன் என்றதும் வீட்டில் என்ன சொன்னார்கள்?

மிகவும் சந்தோஷப் பட்டார்கள். நான் எப்போ துமே உறவினர்களை விட்டு கொஞ்சம் விலகி இருப் பேன். நிகழ்ச்சிகளில் பார்த்துக் கொண்டால் மட்டும் பேசுவேன். அவ்வளவுதான். அது ஏன் என்று எனக்கே தெரியாது. நான் அதிக மாக பேசாத உறவி னர்கள் கூட ‘கபாலி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் போனில் வாழ்த்து தெரிவித்தார்கள்.

சமுத்திரக்கனி இயக்கத் தில் நடித்துவரும் ‘கிட்ணா’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

‘கிட்ணா’ படத்துக்காக போட்டோ ஷுட் எல்லாம் செய் தோம். அதற்கிடையில்தான் ‘கபாலி’ பட வாய்ப்பு வந்தது. இதுபற்றி கேள்விப்பட்டதும், “கண்டிப்பாக அதைச் செய்யுங்கள். உங்கள் திரை யுலக வாழ்க்கைக்கு இது முக்கியமான படம்” என்று சமுத்திரக்கனி சார் என்னை அனுப்பி வைத்தார். அவருடைய பெருந் தன்மைக்கு மிகவும் நன்றி. அவரை என்னால் மறக்க முடியாது. ’கிட்ணா’ படமும் சிறந்த படம். இது 3 கால கட்டங்களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x