Last Updated : 25 Feb, 2017 01:25 PM

 

Published : 25 Feb 2017 01:25 PM
Last Updated : 25 Feb 2017 01:25 PM

நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை: விஷால்

'நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை' என்று சிதம்பரம் பள்ளி விழாவில் விஷால் தெரிவித்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துப்பறிவாளன்'. இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே சிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார் விஷால். அவரோடு பிரசன்னாவும் கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகளை வழங்கினார் விஷால். அதனைத் தொடர்ந்து அவர் பேசியது, "ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்துதான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன்.

நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை.

நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும் , கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன். நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும்.

நான் வளர்ந்து இந்நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன்.

என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும்" என்று பேசினார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x