Published : 18 Mar 2014 12:58 PM
Last Updated : 18 Mar 2014 12:58 PM
'நிமிர்ந்து நில்' படத்தினைத் தொடர்ந்து, சமுத்திரகனி இயக்கும் அடுத்த படத்திற்கும் 'கிட்ணா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்
ஜெயம் ரவி, அமலா பால் நடிக்க, சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான படம் 'நிமிர்ந்து நில்'. சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
'நிமிர்ந்து நில்' படத்தினைத் தொடர்ந்து சமுத்திரகனியின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், சமுத்திரகனி இயக்கும் அடுத்த படத்தினை அவரே நடித்து, தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் அமலா பால். முழுக்க அவரை மையப்படுத்தியே இப்படத்தின் கதை நகர்கிறதாம். காட்டுக்குள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்திற்கு 'கிட்ணா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். கிருஷ்ணா என்பதின் சுருக்கமாம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT