Published : 28 Jan 2017 04:42 PM
Last Updated : 28 Jan 2017 04:42 PM
'நெஞ்சம் மறப்பதில்லை' பட வெளியீட்டுக்கு முன்பே பின்னணி இசையை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
'கான்' படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ளார்கள்.
ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவுள்ள முதல் பேய் படம் இதுவாகும்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை யுவன் துவக்கினார். "எங்களுடைய இணைப்பில் இதுவரை வந்த படங்களில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் பின்னணி இசை தான் சிறந்தது" என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், "திரையுலக வரலாற்றில் முதல்முறையாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பின்னணி இசையை மட்டும் வெளியிட தீர்மானித்துள்ளோம்" என்று யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT