Published : 06 Feb 2017 10:32 AM
Last Updated : 06 Feb 2017 10:32 AM
'முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்' படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் ரஜினி தான் முதல் தேர்வு என்று இயக்குநர் ஜிபு ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மோகன்லால், மீனா நடிக்க ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள மலையாள படம் 'முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அதனையும் ஜிபு ஜேக்கப் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால், ரஜினி தான் தன்னுடைய முதல் தேர்வு என்று இயக்குநர் ஜிபு ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் - மீனா இருவரும் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் தங்களுடைய பழைய காதலைத் தேடுவதே 'முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்' படத்தின் கதையாகும். இப்படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் ரஜினி நடிப்பார் என்று தகவல் வெளியாகி, தற்போது அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT