Published : 17 Feb 2017 09:22 AM
Last Updated : 17 Feb 2017 09:22 AM

நண்பன் சிவகார்த்திகேயனுக்கு ஆருயிர் தோழனின் அன்பு மடல்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவருடைய நண்பரான பாடலாசிரியர் மற்றும் நடிகர் அருண்ராஜா காமராஜ் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

காலம் தான் காரணம்
நம் கல்லூரியோ ஊடகம்
மைதானம் மீதிலே
இருதுளை தோட்டாக்கள் நாம்...
வெற்றிகள்தான் நம்மை இணைத்து இறுக்கியது
வெற்றிடம் இல்லாமலே முறுக்கியது..
ஒரே துறையில் பயிலச் சென்றோம்
ஒன்றாகவே இன்றும் அன்பைப் பயில்கிறோம்.
சிறு சிறு இன்பங்கள் சுற்றுலா பயணங்கள்
உன்னையும் என்னையும் பின்னியது...
மேடைகள் ஏறினோம் மீண்டும் மீண்டும்
புதுப்புது கற்பனை தோன்ற தோன்ற
அன்பெனும் நாரிலே
பூக்களாய் மாறியே
தோரணம் ஆயினோம் வாழ்க்கையிலே
தோல்விகள் ஏதுமே பார்த்ததில்லை...

*

பாதைகள் மாறிடா பயணமிது
போதைகள் ஏறிடா ஏணியிது
சின்னத்திரையிலே நீ வழியமைக்க
உன் எண்ணத்திரையிலே
என்னை சேர்த்து வைக்க
மின்னினாய் நீயுமோர் நட்சத்திரம்.
உன்னுடன் என்னையும் அழைத்து செல்ல
பற்றி நான் வருகிறேன் இணைத்துக் கொள்ள
என்ன நான் சொல்லுவேன் இத்தனைக்கும்
நன்றி வெறும் வார்த்தைதான் ஆயினும் நட்பிருக்கும்...

*

உன்னோடு கைகோர்த்து கடந்திட்ட தூரங்கள்
என்னாலே இயன்றிருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை
தானாக எவரும்தான் தரணியிலே வளர்வதில்லை
ஆனாலும் அதுக்கெல்லாம் உனைத்தவிர விலக்கு இல்லை...
போராடும் போராளி சிரித்தமுக பலசாலி
மகிழ்விக்கப் பிறந்த ஒரு முடிசூடா மன்னா நீ
உன் பின்னே உள்ள ஒவ்வொரு மனசுமே உயிர்நாடி
கண்முன்னே கலகலக்கும் கலங்கமில்லா முன்னோடி,

*

நட்பென்ற சொல்லுக்கு
நாலுகோடி பொருள் உண்டாம்
அந்த நாலுகோடி பொருளுக்கும்
ஒரே ஒரு முகமுண்டாம்
அந்த முகத்துக்குதான்
சிவகார்த்திகேயன் என்ற பெயருண்டாம் ..
நண்பா என் நண்பா
உன்னோடு இருக்கிறது
எனக்குமட்டும் பெருமையில்ல
உன் பேர சொல்லுறது
எனக்குமட்டும் பாக்கியமல்ல
உன்னால சந்தோஷம்
எனக்குமட்டும் வரமல்ல
பல கோடி மனசிருக்கு
பல கோடி உசிருருக்கு
பல கோடி வருஷமெல்லாம்
உனக்கான பெருமையெல்லாம்
உலகத்து தமிழரெல்லாம்
கொண்டாட போறாங்கதான்...

*

உன்னப்போல நண்பனத்தான்
எங்களுக்கு கொடுத்திட்ட
அம்மாக்கும் அப்பாக்கும்
கோடி முறை நன்றி சொல்வேன்...

*

உலகத்த நீ பாத்த இன்னிக்கு தானே
எங்களோட கொண்டாட்ட நாளா நாங்க
கொண்டாடி மகிழ்ந்திருப்போம்...
நண்பனே என் நண்பனே
நீ மகிழ்விக்கும் மன்னனே
என்றுமே என்றுமே
நீயும் மகிழனும் நண்பனே....

*

மக்களை மகிழ்விக்கும் பணி உன் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எப்போதும் தொடர இன்று போல் என்றுமே மகிழ்ந்திருக்க உயர்ந்திருக்க பல கோடி இதயங்களின் ஒற்றைத்துடிப்பான சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
அன்பு நண்பன்
அருண்ராஜா காமராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x