Published : 19 Dec 2013 01:26 PM
Last Updated : 19 Dec 2013 01:26 PM
ரஜினியை நான் இயக்கவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த், பி.வாசு என பல்வேறு இயக்குநர்கள் இப்போட்டியில் இருக்கிறார்கள்.
ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "விரைவில் சுதீப் ('நான் ஈ' வில்லன்) நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். எந்த ஒரு புதிய படத்திலும் நான் ரஜினியை இயக்கவில்லை.
ரஜினியை வைத்து நான் இயக்கவிருந்த படம் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்படுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் செய்திகள் யாவுமே வதந்தி தான். உண்மையில்லை" என்று கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT