Published : 02 May 2017 10:56 AM
Last Updated : 02 May 2017 10:56 AM
‘ஓரம்போ’, ‘வ-குவாட்டர் கட்டிங்’ படங்களைத் தொடர்ந்து மாதவன் - விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கி வருகிறார்கள் புஷ்கர் - காயத்ரி. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் அவர்களிடம் பேசியதில் இருந்து...
‘விக்ரம் வேதா’ படத்தின் கதைக் களம் என்ன?
விக்ரம் என்ற போலீஸ் இன்ஸ் பெக்டரான மாதவன், வேதா (விஜய் சேதுபதி) என்ற ரவுடியைப் பிடிக்க நினைக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் வேதாவைப் பிடிக்கும் போது அவனுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு கதை யைச் சொல்வான். அதிலிருந்து கதை எப்படி நகர்கிறது என்பதை வைத்து திரைக்கதை அமைத் துள்ளோம். விக்ரமாதித்தன் - வேதாளம் கதைகளின் அமைப்பை இப்படத்துக்கு உபயோகப் படுத்தியுள்ளோம்.
இதில் வேதா சொல்லும் கதை, படத்தின் கதையோடு எப்படி இணைகிறது என்பது சுவாரஸ்ய மாக இருக்கும். ஆக்ஷன் த்ரில்லராகத்தான் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். மாதவன் - விஜய் சேதுபதி இருவருமே மிகப்பெரிய நடிகர்கள். அவர்கள் இருவரும் மோதும் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. எங்களது முந்தைய இரண்டு படங்களை விட வித்தியாசமாக ‘விக்ரம் வேதா’ இருக்கும்.
இப்படத்தில் 2 பெரிய நடிகர் களோடு பணிபுரிந்துள்ளீர்கள். கதை யில் அவர்களுடைய தலையீடு இருந்ததா?
ஒரு படத்தை அனைவருமே இணைந்து உருவாக்குவதாகத் தான் நாங்கள் இருவரும் பார்க் கிறோம். நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனை வருமே நாங்கள் சொல்வதைச் செய்துவிட்டால் பிறகு அவர் களுக்கு என்ன மதிப்பு? அப்படி யென்றால் நாங்களே செய்துவிடு வோமே. அப்படிச் செய்யாமல் மற்றவர்களை ஒப்பந்தம் செய் வதே, அவர்களால் இப்படத்துக்கு ஏதாவது புதிதாகச் செய்ய முடியும் என்று நம்புவதால்தான்.
மாதவன் - விஜய் சேதுபதி இருவருமே தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள கதாபாத்திரங்களுக்குள் புகுந்து எப்படிச் செய்யலாம் என்று யோசிப்பவர்கள். அந்த மாதிரியான நடிகர்கள்தான் எங் களுடைய கதைக்குத் தேவை என விரும்பினோம். நாங்கள் சொல்வதை மட்டுமே அனைவரும் செய்தால் படமும் பிளாஸ்டிக் பொருள் போன்று ஆகிவிடும். ஒரு படத்துக்கு நடிகர்களின் உள்ளீடு மிகவும் அவசியம்.
நடிகர்கள் எப்போதுமே களிமண் மாதிரி, இயக்குநர்கள் தான் அவர்களை கதாபாத்திரமாக வடிவமைப்பார்கள் எனச் சிலர் சொல்வார்கள். நாங்கள் அந்தப் பள்ளியில் இருந்து வரவில்லை. நடிகர்களின் தலையீடு இருந் தால்தான் ஒவ்வொரு கதா பாத்திரமும் தனித்துவத்தோடு இருக்கும். இல்லையென்றால் அனைத்துக் கதாபாத்திரங்களுமே புஷ்கர் - காயத்ரி மாதிரித்தான் பேசுவார்கள்.
‘வ - குவாட்டர் கட்டிங்’ படத்துக் குப் பிறகு ஏன் இத்தனை பெரிய இடைவெளி?
நாங்கள் இருவருமே ரொம்ப மெதுவாகத்தான் கதை எழுது வோம். நாங்கள் இயக்கிய ‘ஓரம்போ’, ‘வ - குவாட்டர் கட்டிங்’ இரண்டு படங்களுமே காமெடி படங்கள். 2 காமெடி படங்களுக்குப் பிறகு சீரியஸான படங்கள் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். அதற்கான கதையைத் தேட நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. 3 கதைகளை முழுமையாக எழுதி, இதை இப்போது செய்ய வேண்டாம் அப்புறமாகச் செய்யலாம் என்று தூக்கி வைத்துவிட்டோம்.
‘விக்ரம் வேதா’ கதையை எழுதி முடிக்கவே நீண்ட நாட்கள் ஆனது. இக்கதைக்கான நடிகர்கள் அனைவரிடமும் பேசி, சரியாக அமைய 2 வருடங்கள் எடுத்துக் கொண்டோம். இரண்டு பெரிய நடிகர்களின் தேதிகளும் ஒன்றாக அமையவேண்டும் உள்ளிட்ட சில விஷயங்களால் சில காலம் தாமதம் ஏற்பட்டது. ஒரு கதை எப்போது படமாக வேண்டும் என்பது நமது கையில் இல்லை.
இருவருமே இணைந்து கதை எழுதி இயக்கியுள்ளீர்கள். ஏதாவது இடத்தில் கருத்து வேறுபாடு வந்ததுண்டா?
நாங்கள் இருவருமே கல்லூரி யில் ஒன்றாகத்தான் படித் தோம். இருவருக்கும் ஒரே உள்ளுணர்வுகள் தான். கதையின் ஒரு புள்ளியை யோசித்தால் இருவருமே 99 சதவீதம் ஒரே மாதிரிதான் யோசிப்போம். ஒரு சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் வரும். அதுவும் தீர்க்கக்கூடிய வகையில் தான் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT