Published : 15 Apr 2016 06:03 PM
Last Updated : 15 Apr 2016 06:03 PM
வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும்.
இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியது:
"மணி சார் முதலில் என்னை அழைத்தபோது சற்றே பதற்றமாக இருந்தது. எப்படி பேசப் போறோம் இவ்வளவு பெரிய லெஜண்ட்ஸ் முன்னாடி பேசப்போறோம். அதுவும் ஒரு லெஜண்ட்டைப் பத்தி பேசப்போறோம். சரி, ஏன் என்னைக் கூப்பிட்டாங்கன்னு யோசிச்சி பாக்கும்போது, கோயிங் தட் பிராசஸ் திஸ் பங்ஷன்... இந்தப் பங்ஷன் நடத்தப்போறோம்... என்னல்லாம் செய்யப்போறோம் பேசறப்போ... லெஜண்டரி பர்சனாலிட்டி, லெஜண்டரி பிலிம்மேக்கர் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்காத அறியாமை மிக்க ஒரு ஜெனரேஷனுடைய ரெப்ரசெண்ட் நான். அதுக்குத்தான் மணிசார் என்னை மேடையில நிப்பாட்டணும்னு நெனச்சார்னு நெனைக்கறேன்.
பொம்மைனு முன்னாடி ஒரு படம் பார்த்திருக்கேன். பீட்சான்னு ஒரு படம் எடுத்தபிறகு எல்லாரும் நல்ல த்ரில்லர்னு சொன்னப்போ... எங்கப்பா என்னை அசிங்கமா கூப்பிட்டு சொன்னாரு... அந்தநாள்னு ஒரு படம் இருக்கு அதைப் பாரு. நீ என்னத்தைக் கிழிச்சிருக்கேன்னார். அப்போ அந்த நாள் பார்த்தேன். ஸோ ரெண்டு படம்தான் பார்த்தேன். அதுக்கப்புறம் இந்த ஒரு நாலு நாள்ல அவரைப் பற்றிய நிறைய தெரிந்துகொண்டேன்.
அவரை வச்சி டாக்குமெண்டரிலாம் எடுக்க வேணாம். ஒரு படம் எடுக்கலாம். அவரை ஹீரோவாக வைத்து ஒரு மாஸ் பில்டப்போட இன்ட்ரடக்ஷன் வைத்து அந்த கேரக்டரை வைத்து ஒரு ஸ்கிரீப்டே எழுதி அதை படமாகவே எடுக்கக் கூடிய அளவுக்குத்தான் அவருடைய ஆட்டிட்யூட்... ஐ ஸீ.. ஐடெண்ட் ஹிஸ் கேரக்டர். ஏன்னா மல்டி டேலண்ட். அதுல ஒரு பெரிய விஷயமா நான் பாக்கறது என்னன்னா லாட் ஆப் டேலண்ட்ஸ்... எதை எந்த நேரத்துல ஸ்டார்ட் பண்ணணும். எதை நிப்பாட்டணும்னு தெரிஞ்சிருக்கு அவருக்கு. ஒரு நல்ல படத்துல நடிப்பார். அதுக்கப்புறம் ஒரு ஆறு வருஷங்கள் அதை விட்டுருவாரு.. படிக்கப் போயிடுவாரு.. ஒரு படத்துல பெரியதாக நடிச்சதுக்கப்புறம். அடுத்தது எக்ஸ்டார்டனரி கிளாஸிக் பிலிம்ஸ் எடுப்பாரு. ஒரு பாயிண்ட்ல அதை விடுவாரு... இசை பக்கம் போயிடுவாரு வீணை வாசிக்கப் போறேன்னு.
மிஷ்கின் சார் சொன்னமாதிரி இதுல பஸ்ட்ல இருந்து ஒரு துரதிஷ்டம் என்னன்னா இவ்வளவு பெரிய ஒரு பிலிம் மேக்கர் வந்து படங்களை எடுக்கறதை நிறுத்திட்டாரு. அதை பாஸிட்டிவ்வா நாம பாக்கறதில்லைங்கறதுதான்.
ஒருத்தனுக்கு தனக்கு என்ன தெரியும்.. அதுல இருந்து எங்கே வெளியே வரணும்னு ஒருத்தனுக்கு தெரிஞ்சாலே அவன் பெரிய ஆள்.
இந்த புத்தகத்தில் ஒரு வாசகம் படித்தேன். எனக்குள்ளிருக்கும் ஒரு நடிகனையும் இயக்குநரையும் கொன்னாதான் எனக்குள்ள இருக்கற வீணைக்கலைஞன் வெளியே வருவான் அப்படின்னு சொல்லியிருக்காரு. அதை சொல்றதுக்கே ஒரு தைரியம் வேணும். அவர் பண்ணது எல்லாமே புதுமை புதுசு.
அந்தப்புத்தகத்தில் ராமன் சாருக்கு (எஸ்.பாலச்சந்தரின் மகன்) எழுதின லெட்டர் எல்லாம் பாத்தா.. அதிலேயே ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கும். இதைப் படித்த பிறகு, நான் யாருகிட்டேயும் ஒர்க் பண்ணல. ஷாட் பிலிம்தான் எடுத்துட்டு வந்தேன். சரி யார் ஷாட் பிலிம் எடுத்திருக்காங்கன்னு பாக்கலாம்னு பார்த்தா எனக்கு ஹிஸ்டரி தெரியல. தகவல் கூட தப்பா இருக்கலாம். இந்த புத்தகத்தைப் படித்தபிறகு பார்த்தால் இவர்தான் எடுத்திருக்கார்.
நான் எப்படி ஒரு ஷாட் பிலிம் பண்ணி ஒரு புரடியூசரைப் பிடிச்சேனோ அது மாதிரிதான் அவர் தான் செஞ்ச ஒரு குறும்படத்தை வைத்து கைதி அப்படிங்கற படம் பண்ற வாய்ப்பு அவருக்கு கிடைச்சிருக்கு. தமிழ், இந்தியன் சினிமா இன்டஸ்ட்ரீயிலேயே ஷாட் பிலிம் வச்சி புரொடியூசர பிடிச்ச ஆளும் அவருதான். இன்னொன்னும் சொல்லலாம். நடிகர் சங்கம் ரெண்டுமூனுநாள்ல கிரிக்கெட் மேட்ச் நடத்தப்போறோங்க. அதையும் அந்தகாலத்திலேயே அவர் பண்ணிட்டாரு. தமிழ் நடிகர்களை இந்தி நடிகர்களுக்கு எதிரா விளையாடவச்சி கிரிக்கெட் மேட்ச் நடத்தியிருக்காரு" என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT