Published : 19 Jun 2015 11:00 AM
Last Updated : 19 Jun 2015 11:00 AM

‘காக்கா முட்டை’ படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு: தமிழ் படத்துக்கு முதல்முறை அங்கீகாரம்

சமீபத்தில் வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்ப‌டத்துக்கு கர்நாடக அரசு முழுமையான வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. கன்னடம் அல்லாத வேற்று மொழிப் படத்துக்கு முதல்முறையாக இந்தச் சலுகை கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’திரைப்படத்தை மணிகண்டன் இயக்கினார். சிறுவர் கள் விக்னேஷ், ரமேஷ் நடித்த இந்தப் படத்துக்கு 2 தேசிய விருது கள் உட்பட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பல விருதுகள் கிடைத்தன. இப்படம் சமீப‌த்தில் வெளியாகி தமிழகம் மட்டுமில்லா மல் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடுகிறது.

திரை விமர்சகர்களின் பாராட்டை யும் அமோக வசூலையும் பெற் றுள்ள ‘காக்கா முட்டை’ திரைப் படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டு மில்லாமல் பிறமொழி ரசிகர்களும் விரும்பி பார்க்கின்றனர். இரு வாரங் களுக்கு முன்பாக கர்நாடகாவில் வெளியான இந்தப் படம், கன்னட இலக்கியவாதிகளால் வெகுவாக பாராட்ட‌ப்பட்டது. இதைத் தொடர்ந்து ' விளிம்பு நிலை மக்களின் வாழ்வையும் ஏழை சிறுவர்களின் வலியையும் சிறப்பாக விளக்கிய ‘காக்கா முட்டை’திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இப்படத்தை விநியோகம் செய்த ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறிய போது, ''எங்களுடைய திரைப்படத் துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. எதிர்பாராமல் வந்த இந்த அறிவிப்பால், ‘காக்கா முட்டை’படத்தை கன்னட மக்களும் கண்டு ரசிப்பார்கள்.

கன்னட மொழி அல்லாத வேற்று மொழி படத்துக்கு கர்நாடகத்தில் வரிவிலக்கு அளிப்பது இதுவே முதல்முறை. அதிலும் தமிழ்மொழி படத்துக்கு வரிவிலக்கு அளித்த தில்லை என நினைக்கிறேன். இந்த சிறப்பான ஆணையை பிறப்பித்த கர்நாடக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x