Last Updated : 01 Mar, 2017 06:20 PM

 

Published : 01 Mar 2017 06:20 PM
Last Updated : 01 Mar 2017 06:20 PM

ரஜினி படத்தில் நடிப்பது குறித்து சில நாட்களில் தெரியும்: வித்யாபாலன்

ரஜினி - ரஞ்சித் படத்தில் நடிக்கவிருப்பது குறித்து சில நாட்களில் தெரியும் என்று வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன், ரஞ்சித் - ரஜினி இணையும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது பற்றி அவரிடம் கேட்ட போது, அதற்கு சரியாக பதிலளிக்காமல் சென்றதால் இந்த யூகங்கள் ஆரம்பித்துள்ளன.

கபாலி படத்துக்குப் பிறகு, ரஜினி - ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் வித்யா பாலன் கதாநாயகியாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மும்பையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்கு நடிகை வித்யாபாலன் வந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது, "இன்னும் சில நாட்களில் தெரியும்" என்று மட்டும் பதில் கூறினார்.

ஒருவேளை வித்யா பாலன் இதில் நடித்தால் தமிழில் அவரது முதல் படமாக இது இருக்கும். தற்போது 'பேகம் ஜான்' என்ற தனது அடுத்த இந்திப் படத்தின் வெளியீட்டுக்காக வித்யா பாலன் காத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x