Published : 03 Nov 2013 12:40 PM
Last Updated : 03 Nov 2013 12:40 PM
கண்ட மேனிக்கு குப்பையை சரவாரியாக ரசிகனின் மீது இறைத்து அதற்கு கோலாகலமாக பப்ளிசிட்டி செய்து அரங்கத்தில் அரங்கேற்றம் கண்டுள்ள படம், இயக்குனர் எம்.ராஜேஷின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'.
இயக்குனர் ராஜேஷிடம் பேனாவை கொடுத்துவிட்டு நீங்கதான் இயக்குனர்... நீங்கதான் கதாசிரியர்... என்ன தோணுதோ எழுதுங்கன்னு சொல்லிட்டாங்க போல! பேனாவின் நிப் எப்படி வளையுதோ அதற்கேற்ற மாதிரி ஏதேதோ கிறுக்கிவிட்டு அதை கதைன்னு பெயர் சூட்டிட்டாரு.
மது அருந்தியவர்கள் அர்த்தமே இல்லாமல் உளறவுது போல் படம் எங்க போகுது எதுல டர்ன் எடுக்குதுன்னு எதுக்குமே பெரிய சம்பந்தம் கிடையாது. இன்டர்வெல் வரைக்கும் காஜலுக்கு பாட வராதுன்னு புரிய வெச்சு, அவங்களோட அறியாமைய அறிய வெச்சு காதல் வலையில சிக்க வைக்கிறாரு கார்த்தி. இன்டர்வலுக்கு அப்பால் காஜலுக்கு டான்ஸ் ஆட தெரியாதுன்னு புரிய வெச்சு லவ் பண்ண வெக்கறாருப்பா. இதுக்கு நடுவுல பிரபுவோட கதைன்னு சொல்லி ஒரு, ஒரு மணி நேரத்துக்கு மொக்க ப்ளாஷ் பாக். இதுதான் கதையாமாம்.
முதல் பாதி வரைக்கும் அவ்ளோ மோசமா இல்லையேன்னு தோண வெச்ச திரைக்கதை, இரண்டாம் பாதியில் ரம்பமாக காதை அறுக்கிறது. கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடித்த வியாபாரி படத்தில் கிழிந்த ஜவ்வு இந்த படத்தில் கிழிந்து தொங்குகிறது. கார்த்தி, சந்தானம் மாற்றி மாற்றி கத்திக்கிட்டு ஒப்பாரி வைக்க வெறுப்பு உஷ்ணத்தை தொடுகின்றது.
படம் பார்க்கும் ரசிகர்கள் பொறுமையற்று திரையங்கில் கூக்குரலிட திரையரங்கமே சந்தையாக மாறுகிறது. இயக்குனர் தான் கேப்டன் ஆப் தி ஷிப், ரசிகர்கள் கதையோட பயணம் செய்ய வைக்காத எந்த இயக்குனரின் முயற்சியும் தோல்வியைதான் தழுவும்.
வெறும் சந்தானத்தை மட்டும் நம்பி அமைக்கப்பட்ட கதை போல் தான் 'அழகுராஜா' தோன்றியது. நகைச்சுவை கூட நம்மை நாமே இது காமெடி என்று வருத்திக் கொண்டு சிரித்தால் மட்டுமே வரும் என்பது போல் தோன்றியது.
'அலெக்ஸ் பாண்டியன்', 'சகுனி'க்கு அழகு ராஜா எவ்வளவோ தேவலை. அதுக்காக படம் பார்ப்பவன் அந்த படத்துக்கு இது பரவாயில்லை என்று கூறி தேற்றிக் கொள்ள முடியும். கண்டிப்பாக படத்தொகுப்பாளரை பாராட்டியாக வேண்டும் எப்படித்தான் இந்தப் படத்தை பார்த்து ட்ரிம் பண்ணியிருப்பாரோ! இல்லை, பாக்கறவங்க சாகட்டும் என்ற எண்ணத்தில் மூணு மணி நேரத்திற்கு விட்டுட்டார் போல. பிரபு, சரண்யா, நாசர் இப்படி நல்ல நடிகர்களை வெறும் ஊறுகாய் மாதிரி பயன் படுத்தியிருக்கார் இயக்குனர்.
படத்தோட ஒரே பிளஸ் பாயின்ட் 'கரீனா சோப்ராவாக' சந்தானம், 'கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வுடன்' இணைந்து வருகின்ற பகுதிகள்.
அடித்தளமே இல்லாமல் எந்த கோபுரமும் உருவாகாது. என்னதான் சந்தானமும் கார்த்தியும் நகைச்சுவைக்கு ஏற்ற கூட்டணியாவே இருந்தாலும் கதை இல்லன்னா சர்வ நாசம் தான்!
மூணு மணி நேரத்திற்கும், நூற்றி இருபது ரூபாய்க்கும் முழு அளவில் கேடு விளைவித்துள்ளது இந்த 'அழகு ராஜா'.
தூக்கு தண்டனைக் கைதி தொங்கப் போகும் முன் முகத்தில் மூடுகின்ற கருப்புத் துணி தான் இந்தப் பதிவும், தொங்குவதும் தொங்காததும் உங்க இஷ்டம். 'தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!
'அழகு ராஜா' - காலைக் கொடு... ஆளை விடு.
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT