Published : 16 Aug 2016 10:00 AM
Last Updated : 16 Aug 2016 10:00 AM
காதலை மையமாகக் கொண்டு பல வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், முதல்முறையாக ‘நம்பியார்’ என்ற படத்தின்மூலம் தயாரிப்பாளராகி உள்ளார். அறிமுக இயக்குநர் கணேஷாவின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சுனேனா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீகாந்த்தின் கோல்டன் ஃப்ரைடே பிலிம்ஸ் வெளியிடுகிறது. பட வெளியீடு நெருங்கி வரும் நிலையில், ஸ்ரீகாந்த்துடன் ஒரு நேர்காணல்..
‘நம்பியார்' என வில்லன் நடிகரின் பெயரை படத் தலைப்பாக வைத்தது ஏன்?
சினிமாவில் நல்ல கதாநாயகன் என்றால் எம்ஜிஆர். அதேபோல, வில்லன் என்றால் நம்பியார். அதே போல, ஒவ்வொரு மனிதனுக்குள் ளும் நல்லதும், கெட்டதும் இருக் கிறது. இந்த கதையே ராமச்சந்திர னுக்கும் நம்பியாருக்கும் இடையே நடப்பதுதான். சந்தானம் - நம்பியார், நான் - ராமச்சந்திரன். நமக்குள் இருக்கும் ‘நம்பியாரை’ கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்து விட்டோம் என்றால் நாம் அனை வருமே எம்ஜிஆர்தான். இதுதான் இப்படத்தின் கதைக்களம்.
நாயகனாக நடித்துவரும் சந் தானத்தை இதில் நடிக்க எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
இப்படத்தின் கதையைக் கேட்டதுமே, ‘நான் பண்றேன்’ என்றார். முழுப் படமும் சந்தானம் வருவார். இதில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். அவர் தன் படத்துக்கு பாடுவது இது முதல் முறை. படத்தின் ஒரு பகுதியில் எனக்கு அவர் டப்பிங்கும் பேசினார்.
பட வெளியீடு ஏன் இவ்வளவு தாமதமானது?
உண்மையில், படம் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிந்துவிட்டது. வெளியீடுதான் தாமதமானது. சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவது ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது. ரஜினி சார் படம் முதல், புதுமுகத்தின் படம் வரை இது வழக்கமாகிவிட்டது. புது தயாரிப்பாளர்கள் பலர் வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. நிறைய படங் களுக்கு திரையரங்குகள் கிடைப்ப தில்லை. அந்த காலத்தில் சுமாரான படங்கள் ஓடுவதற்குகூட 5 வாரங்கள் கிடைத்தது. இன் றைக்கு சூப்பர்ஹிட் படங்களே 2 வாரம்கூட ஓடுவதில்லை.
திரையுலகில் தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
முன்பு தியேட்டர் மட்டுமே பொழுதுபோக்கு. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், போனிலேயே படம் பார்க்க முடிகிறது. வேறொரு தொழில் நுட்பம் வந்தால், சினிமா பார்ப்பது இன்னும் எளிதாகும். திருட்டு விசிடி இன்னொரு அச்சுறுத்தல். அதை தடுக்க வேண்டும். நல்ல படமா, சுமாரான படமா என்பதை மக்கள் திரையரங்குக்கு சென்று பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும். ‘இணையத்தில் பார்த் துக்கொள்ளலாம்’ என்ற மக்களின் மனநிலை மாறவேண்டும்.
தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்தீர்கள். காதல் படங்கள் தற்போது குறைந்துவிட்டதே..
சமீபகாலமாக தமிழ் சினிமா வின் போக்கு மாறியிருக்கிறது. பேய் படம் வெற்றிபெற்றால், தொடர்ச்சியாக எல்லோரும் பேய் படம் எடுக்கிறார்கள். இப் போதும் இயக்குநர்களிடம் ‘காதல் கதைகள் பண்ணலாமே’ என்று கேட்கிறேன். காதல் கதை கள் மெதுவாக நகரும் என்று நினைக்கிறார்களா என தெரிய வில்லை. சமீபத்தில் நான் கேட்ட வற்றில் காதல் கதையே இல்லை.
காதல் இல்லாமல் நீங்கள் வேறு களங்களில் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லையே, ஏன்?
எனக்கு காதல் கதைகளில் மட்டும்தான் அதிர்ஷ்டம் இருக் கிறதோ, என்னவோ! அவை அனைத்துமே வெற்றியடைந்திருக் கிறது.
தயாரிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது? தொடர்ச்சியாக படம் தயாரிப்பீர்களா?
சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் தயாரிப்பாளரானேன். இப் படத்தை தயாரிக்க இருந்த தயா ரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இயக்குநரை கைவிடக் கூடாது என்பதால், நானே தயாரிப்பில் இறங்கினேன். ‘நம்பியார்’ படத் தைத் தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து தயாரிக்கிறேன். அதற்கு ‘சாமியாட்டம்’ என்று இப் போதைக்கு தலைப்பு வைத் திருக்கிறோம். மேற்கொண்டு படங்கள் தயாரிக்க விருப்பம் தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT