Published : 13 Nov 2013 11:16 AM
Last Updated : 13 Nov 2013 11:16 AM
'மதகஜராஜா' படத்தினை டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிட முயற்சி எடுப்பேன் என்று விஷால் உறுதியளித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியான படங்களில் 'ஆரம்பம்' படத்தினை அடுத்து, 'பாண்டியநாடு’ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு தமிழகம் முழுவதுமே திரையரங்குகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் உற்சாகமாகியுள்ளது.
'பாண்டிய நாடு' திரையிட்டு வரும் திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் விஷால். இதனால் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பது அவரது எண்ணம்.
வேலூரில் ரசிகர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, “ தமிழகத்தில் 'பாண்டியநாடு' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் கூடுதலாக 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. என் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இதைக் கருதுகிறேன்.
இந்த படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்கள், பார்வையாளர்கள் டைரக்டர் சுசீந்திரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாண்டியநாடு திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களுக்கும் சென்று வர ஆசைப்படுகிறேன். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட தியேட்டர்களுக்கு சென்று வந்துள்ளேன்.
இதையடுயத்து கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறேன். எனது அடுத்த படம் 'நான் சிவப்பு மனிதன்'.
'மதகராஜா' படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் ரிலீஸ் செய்ய முயற்சி எடுப்பேன். மதகராஜாவும் வெற்றிப் படமாக அமையும்.”என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT