Published : 27 Jan 2017 06:31 PM
Last Updated : 27 Jan 2017 06:31 PM
தனது படப்பிடிப்பு தளத்தில் பெப்சி மற்றும் கோக் தடை செய்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
தமிழில் இவர் இயக்கிய கடைசிப் படமான 'கத்தி', விவசாயிகள் பிரச்சினை மற்றும் குளிர்பான ஆலைகள் தொடர்பான பிரச்சினையை அலசியது. தற்போது தமிழகமெங்கும் விவசாயிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது மட்டுமன்றி பல்வேறு இடங்களில் பெப்சி - கோக் தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "'கத்தி' கதை எழுதத் தொடங்கியதில் இருந்தே பெப்சி மற்றும் கோக் இரண்டையும் குடிப்பதை நிறுத்திவிட்டேன். தற்போது என்னுடைய படப்பிடிப்பு தளத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸின் அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT