Published : 29 Apr 2017 12:01 PM
Last Updated : 29 Apr 2017 12:01 PM

நெட்டிசன் நோட்ஸ்: பாகுபலி 2- பிரம்மாண்டத்தின் உச்சம்!

Selvam Chidambaram

தமிழ் கதைக் களமல்ல, சரியான தமிழ் உச்சரிப்போ, பாடல்களோ இல்லை. ஆனால் ராஜமெளலி என்பவரின் கற்பனை, படமாக்கத்தை நம்பி திரையரங்கு நிறைந்த கூட்டம். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளார் ராஜமெளலி.

தமிழ் இயக்குநர்கள் சதையை நம்பாமல் கதையை நம்பினால் பாகுபலி போல் திரையரங்குகளை நிறைய வைக்கலாம்.

Thamizh K Senthil

தொடர் ஆரவாரத்தோடு விஜய் அஜித் படங்களை கூட பார்த்ததில்லை.,

பாகுபலி; நேரடி தமிழ் படம் மாதிரி கொண்டாடுகின்றனர் தமிழர்கள்.

கவி

பெண்களின் மேல் கை வைத்தால்

வெட்ட வேண்டியது விரல்கள் அல்ல- பாகுபலி.

Sridhar Subramaniam

பாகுபலி வெறும் சினிமா, அதற்குப் போய் இவ்வளவு அலப்பறையா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சினிமாவும் நம் பொதுக் கலாச்சாரத்தின் அங்கம் என்பது ஒரு புறம் இருக்க, முக்கியமாக நான் பாகுபலியின் வெற்றியை கவனிக்கிறேன். அது அவர்களுக்கு எளிதாக வாய்க்கவில்லை. வங்கியைக் கொள்ளையடித்தோ அல்லது ஈமு கோழி திட்டம் தீட்டியோ ராஜமவுலி அந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை. அவரின் வெற்றிக்குப் பின்னால் தன்னம்பிக்கை, பெரும் கற்பனைத் திறன், கடும் உழைப்பு மற்றும் அதீத துணிச்சல் இருந்திருக்கிறது. நான் அதனைக் கொண்டாடுகிறேன்.

கோழியின் கிறுக்கல் @Kozhiyaar

முதன்முதலாக யானையின் பிரமாண்டத்தைப் பார்த்து வியக்கும் குழந்தையின் மனநிலையிலேயே பாகுபலி படம் முழுவதும் பார்த்து ரசித்தேன்!!

சசி

பாகுபலி - பிரம்மாண்டத்தின் உச்சம்.

சாம்ராட் சரவணன்‏ @sarvanz

பாகுபலி பாத்ததும் நிறைய பேருக்கு வீரம் பொத்துட்டு வந்துருக்கும். காலையில எந்திரிச்சதும் அந்த வீரம் கனவு போல காணாமல் போய்ருக்கும். அதில் நானும் அடக்கம்.

RamKumar‏ @ramk8059

பாகுபலி படம் எல்லாம் தியேட்டர்ல பாத்தா தான் அந்த பீல். வேற லெவல் படம்.

மகிழ்வரசு Patriot‏ @anandraaj01

பாகுபலி படத்த இன்னும் பார்க்கலனு சொன்னா அசிங்கமோ?

Divya Divya

சண்டைக் காட்சியில் ஒரு இடத்தில் மரத்தை வளைத்து பறந்து தாவுவது போல ஒரு காட்சி வருகிறது. லிங்காவில் ரஜினி பறந்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடில்லை தான். ஆனால் அதில் நகைப்புக்குள்ளான காட்சி பாகுபலியில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது.

என் இலக்கு எப்போதுமே மாஸ் ரசிகர்கள் தான், சொல்வதில் கொஞ்சம் லாஜிக் சேர்த்தால் க்ளாஸ் ரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ராஜமெளலியே சொல்லியிருக்கிறார். பாகுபலி பார்க்காதவர்கள் இருந்தால் பார்த்து விடவும். இதுவே என் கட்டளை. கட்டளையே சாசனம்..

Jagan P K Srinivasan

தேட மனமில்லை தேடி போக இடமும் இல்லை, கட்டப்பா கொன்றது பாகுபலியை மட்டுமல்ல என்னையும் தான். #ஜெய்_மகிழ்மதி.

Sengovi Guru

படகில் ஏற பாகுபலியின் தோளில் தேவசேனா நடப்பது, படகு பறப்பது, பன்றி வேட்டை, அனுஷ்கா கோட்டையில் நடக்கும் போர்க்காட்சிகள் என்று படம் முழுக்க கண்களுக்கு விருந்து தரும் விஷுவல் ட்ரீட்ஸ் நிறைய.

அழகும் கம்பீரமும் ஒருங்கே அமைவதெல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அனுஷ்கா, அந்த வரம் வாங்கி வந்த தேவதை.

Dhanush Karthik‏ @Dhanush45991979

கட்டப்பா பாகுபலிய முதுகில் குத்திய காரணம் என்ன? எனக்கு தெரியும். பாகுபலி திரும்பி இருந்தார். அதான் காரணம்.

விச்சு‏ @r_vichu

பாகுபலி- அனுஷ்கா ரசிகர்களுக்கு ஒரு இனிய விருந்து என்றால் அது மிகையில்லை.

SIvaROshaN.MAHAmayaN‏ @MsivaroshanM

நாம தேவசேனா மாதிரி பொண்ணு வேணும் எண்டு கனவு காணனும் என்டா முதல்ல நாம அமரேந்திர பாகுபலி மாதிரி இருக்கணும்.

saiprasanth_s

பாகுபலி 2 எதிர்பார்ப்பை முழுதும் நிறைவேற்றவில்லை. என்னை பொறுத்தவரை எனக்கு திருப்தி இல்லை.

cinemapluz‏ @cinemapluz11

இந்த ஒரு காட்சி போதும். இப்படி ஒரு மகன் வேணும் எல்லா தாய்க்கும்.

Subasree Mohan

பாகுபலி பார்த்து ஜென்ம சாபல்யம் அடைஞ்சாச்சு. வடக்கே ஹிந்திலே பாதி பேருக்கு டிக்கெட்டே கிடைக்கலை. எல்லோரும் உச்சில தூக்கி வச்சு கொண்டாடறாங்க. இங்கே உள்ள டிவில எல்லாம் ராஜ மெளலிய பத்திதான் பேச்சு. அமீர், சல்மான் மட்டுமே கொண்டாடிய அவர்களை நம்மையும் மிரட்டலுடன் பார்க்க வைத்திருக்கிறார்.

Sathiya Kumar S

பாக்கும்போதே இந்த படத்த தியேட்டர்ல மட்டும்தான் பார்க்கணும்ன்ற ஆவலை தூண்டனும்.. அந்தவகையில் பாகுபலி வெற்றி அடைந்துவிட்டது.

Muthuvel Pandian

இந்திய சினிமா வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம்.

Dhinesh Kumar S

பாகுபலி 2- படத்தின் டைட்டில் போடும் காட்சியில் விரியத் தொடங்கும் நமது விழித்திரை படத்தில் என்ட் கார்டு போடும் வரை திரையை விட்டு அகலமறுக்கும் அளவிற்கு செதுக்கியிருக்கிறார்கள் பாகுபலியை.

அனுஷ்கா - பிரபாஸ் இணைந்து எதிரிகளை வீழ்த்தும் காட்சி மாஸ்டர் பீஸ். இன்னும் கண்களிலேயே அந்த காட்சிகள் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அமர்க்களம். அமரேந்திர பாகுபலியாக வரும் பிரபாஸ் செய்யும் சாகசங்கள் எல்லாம் இதிகாசத்தில் நாம் கேள்விப்பட்டவை. ஆனால் அவரது உடல் மொழியால் அந்த காட்சிகள் எல்லாம் நமக்கு உறுத்தல் இல்லாமல் நம்பவைக்கிறது..

ராஜமவுலிகாரு ஒழுங்கா எங்க தலைவர வச்சி ஒரு படம் எடுங்க... வி ஆர் வெயிட்டிங்.

Lala Kalai Arasan

பாகுபலி ஒரு பிரமாண்டமான மசாலா. சிலாகித்து கொண்டாடப்பட வேண்டிய படம் இல்லை.

Sharmila Rajasekar

நேத்து பாகுபலி ஷோ போனவங்க எல்லாருக்கும் நைட்டு தூங்கும் போது, பாகுபலி பாகுபலின்னு காதுல வந்து கத்தற மாதிரியே சத்தம் கேட்டுருக்குமே..!!

Vijayaraghavan Krishnan

சத்தியராஜ். தமிழ் படங்களில் அவரின் தெனாவெட்டான அகராதித்தன பேச்சு, நடிப்பைப் பார்த்து விட்டு ஒரு விசுவாச அடிமை பாத்திரம் புதுமை.

Ranjeeth Vc

ஜெய் அனுஷ்கா...

மகுடபதி

பாகுபலியை குத்தி விட்ட பிறகும் மனைவியையோ பெறப்போகும் பிள்ளையையோ பற்றி யோசிக்காது தாயை பார்த்து கொள்ள சொல்லி பாகுபலி தனது கையை பிடித்து கெஞ்சியதை அடிமை கட்டப்பா ராஜமாதாவை சிவகாமி என விளித்து விவரிக்கும் ஒரு சீன் போதும். இரண்டு பாகுபலிக்குமான மொத்த திரைக்கதைக்கும் மகுடம் அது.

Hari Haran

மதன்கார்க்கியோட வசனங்களை எடுத்துட்டுப் பாகுபலியை தமிழ்ல பார்த்து இருந்தா பாகுபலி ஒரு மொழிமாற்றுப் பட உணர்வையே தந்து இருக்கும்.

Karthikeyan Yeskha

அன்னப் படகில் சவாரியும், பாடல் காட்சிகளும். அடாடாடாடாடா. முழுக்க ஒரு கற்பனை, ஃபேன்டஸி உலகிற்குள் மூழ்கிப் போவீர்கள். பாகுபலி 1 - ன் "பச்சைப் பூ நீயடா" தோற்கும்.

Sathishkumar Subramaniam

"அமரேந்திர பாகுபலியாகிய நான்... "வசனம் ஏற்படுத்திய கூஸ்பம்ப்கள் பாட்ஷாவில் தலைவரின் 'உள்ளே போ' மற்றும் 'தளபதி' ராக்கம்மா கையை தட்டு பாடலில் கழுத்தில் துண்டுடன் தலைவரின் எண்ட்ரி இரண்டும் தந்த புல்லரிப்புக்கு எந்த வகையிலும் குறையாதது.

Vino Jasan

பாகுபலி 2 பார்த்துவிட்டேன். இனி சினிமாவில் எனக்குள்ள ஒரே ஆசை... சூப்பர் ஸ்டார் ரஜினி - ராஜமௌலி இணைய வேண்டும். அது பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு காவியமாகவும் இருக்கலாம்.. மிஷன் டு மார்ஸ் மாதிரி ஒரு அல்ட்ரா சைன்ஸ் ஃபிக்ஷனாகவும் இருக்கலாம்.

காரை செந்தில் குமார்

பாகுபலி கதையை கட்டப்பா சொல்லி முடிக்கிற வரைக்கும் சும்மா தெறிக்க விட்ருக்காங்க...அதுக்கு அப்புறம் எனக்கு பிடிக்கல. (அனுஷ்காவ வயசானவங்களா காட்றாங்க)

Suresh Kannan

ராஜமெளலி ஒரு திறமையான கதைசொல்லி. பாகுபலி -2-ன் மூலம் இதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். ஏறத்தாழ எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. எனவே எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம். ராஜமெளலி இதில் இறங்கி அடித்து விளையாடியிருக்கிறார்.

ஹாலிவுட்டில் மட்டும்தான் கோடிகளை இறைத்து பிரம்மாண்டமான காவியப்படங்களை உருவாக்க முடியும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு அது சாத்தியமில்லை என்கிற மேற்கத்திய ஏளனப் பார்வையை, அப்படியொரு பொதுப்புத்தியை தனது பிரம்மாண்டத்தால் அடித்து நொறுக்கியிருக்கிறார் இயக்குநர். பெரிய திரையில் இதைக் கண்டுகளிப்பதே இதன் உழைப்பிற்கு நாம் அளிக்கும் நீதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x