Published : 18 Nov 2013 09:30 AM
Last Updated : 18 Nov 2013 09:30 AM
ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் குணச்சித் திர வேடங்களில் நடித்தவர் நடிகர் திடீர் கண்ணையா (76).
இவர் மூச்சுத் திணறல் காரண மாக சென்னையில் ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார். 1937-ம் ஆண்டு சென்னையில் பிறந்த அவர், 1960 முதல் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கே. பாலசந்தர் இயக்கிய, ‘அவள் ஒரு தொடர் கதை’ அவர் நடித்த முதல் படமாகும். ‘வெள்ளை ரோஜா’, ‘ப்ரியா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ ‘போக்கிரி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் காலமானார்.
கண்ணையாவின் உடல் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT