Published : 05 Mar 2017 09:33 AM
Last Updated : 05 Mar 2017 09:33 AM

மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று ஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டிய நிகழ்ச்சி

மகளிர் தினத்தன்று ஐநா சபையில், ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெறுகிறார்.

மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் மகத்துவத்தை விளக்கும் வகையிலும், இந்திய கலச்சாரத்தை உலகுக்கு பறை சாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடராஜர் புஷ்பாஞ்சலி, கவிஞர் வைரமுத்துவின் அவசர தாலாட்டு பாடல், காஞ்சி பெரியவரின் வாக்கில் உதித்த ‘மைத்ரிம் பஜத’ என்ற உலக சமாதானத்துக்கான பாடல் உட்பட பல பாடல்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடு கிறார். இதில் ‘மைத்ரிம் பஜத’ என்ற பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியால் ஐநா சபையில் முதல் முறையாக பாடப்பட்ட பாடல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x