Published : 08 Apr 2014 12:33 PM
Last Updated : 08 Apr 2014 12:33 PM
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் - முன்னணிக் கதாநாயகி அமலாபால் இருவரும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இதுதொடர்பாக நடிகை அமலாபால் நேற்றிரவு ஊடகங்களுக்கு திடீர் அறிக்கை அனுப்பியிருக்கிறார்.
அதில் நாங்கள் முறையாக அறிவிக்கும் வரை நீங்கள் எந்த முடிக்கும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
காதல் பின்னணி :
ஏ.எல். விஜய் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் இயக்குநர் விஜயுடன் ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
ஆனால் இதை இருவரது தரப்பிலும் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.எல். விஜய் தற்போது இயக்கி வெளிவரத் தயாராக இருக்கும் ‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக அமலாபாலையும் அழைத்திருந்தார்.
இதற்கிடையில் அமலா பால் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் கடித்தத்தில் “என் எதிர்காலம் குறித்து, இயக்குநர் விஜயுடன் இணைந்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன். அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தததும் எங்கள் எதிர்காலம் பற்றி முடிவு செய்து அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT