Published : 21 Feb 2017 09:02 AM
Last Updated : 21 Feb 2017 09:02 AM
கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளில் எதிரொளித்த ‘பிரேக்கிங் நியூஸ்’என்ற வார்த்தை அரசியல் கட்சிகளை மட்டுமின்றி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சிகளுக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.
அரசியலில் இதற்கு முன் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் நடந்திருந்தாலும் தொலைக்காட்சி, சமூக வலைதள ஊடகங்கள் 24 மணி நேரமும் செய்திகளை முந்தித் தருவதில் செலுத்திய கவனத்தால் சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களின் டி.ஆர்.பி மதிப்பில் மாற்றம் இருக்கவே செய்திருக்கிறது.
இந்நிலையில் நடனம், பாட்டு, சமையல், சீரியல் என்று முழுக்கவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பிரதான இடம் அளித்து வரும் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி மதிப்பு எப்படியிருந்தன என்பதை சிலரிடம் கேட்டோம்.
‘விஜய்’ தொலைக்காட்சி சார்பில் கூறியதாவது:
உண்மைதான். செய்தி சேனல்களைப் பார்க்காதவர்கள் கூட கடந்த சில நாட்களாக அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு சீரியலோ, ரியாலிட்டி நிகழ்ச்சியோ அதுவரை 40 புள்ளிகள் பெற்று முன்னணியில் இருந்தது என்றால், இந்தக் காலகட்டத்தில் 2 புள்ளிகள் குறையவே செய்தன. அதேபோல 10 புள்ளிகள் பெற்ற செய்திச் சேனல்கள் இந்நாட்களில் 12 புள்ளிகள் பெற்றன என்றும் சொல்லலாம்!’’
‘சன்’ தொலைக்காட்சி சார்பில் கூறியதாவது:
பரபரப்பாக அரசியல் சூழலில் செய்தி சேனல்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படும். அடுத்தடுத்து என்ன என்பதை மக்களும் அறிய ஆர்வமாக இருப்பார்கள். இதனால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் சேனலுக்குப் பெரிதாக பாதிப்பு இல்லை. நடப்புகளை அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் செய்தி சேனலை பார்ப்பார்கள். ‘இந்தந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்’ என்பவர்கள், அந்தந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தத்தான் செய்தனர். கடந்த நாட்களின் அரசியல் பரபரப்பு எங்களின் டி.ஆர்.பி மதிப்பை பெரிதாக பாதிக்கவில்லை என்பதே நிஜம்!’’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT