Published : 30 Apr 2014 03:06 PM
Last Updated : 30 Apr 2014 03:06 PM
தனியார் வங்கியிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கடத்தி சூரியன் மறைவதற்குள் திரும்ப வைத்துவிடுவது. இதில் கிடைக்கும் வட்டியைப் பங்குபோட்டுக் கொள்வது. நூதனமான இந்த மோசடிக்குப் பின்ன ணியில் பெரும் கும்பலே இயங்குகிறது, ஒரு நாள் இந்தப் பணம் அவர்கள் வசமிருந்து கடத்தப்பட்டால் என்ன ஆகும்? இதை வைத்துக்கொண்டு பின்னப்பட்ட கதைதான் ‘என்னமோ நடக்குது’.
பொருள் (பணம்) எப்படிக் காணாமல் போனது என்கிற கேள்வியின் பின்னணி யில் கதை தொடங்குகிறது. நிழல் உலக தாதாக்களும், அரசியல்வாதி பர்மாவும் (ரகுமான்) வங்கி அதிகாரி யான காயத்ரியுடன் (சுகன்யா) சேர்ந்து வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்டு, லாபம் பார்க்கிறார்கள்.
காதலி மதுவின் (மஹிமா) படிப்புச் செலவுக்காக வாங்கிய கந்து வட்டிக் கடனைத் திரும்ப அடைப்பதற்காக லாயரிடம் (தம்பி ராமய்யா) பணம் கேட்டுப் போகும் நாயகன் விஜி (வசந்த் விஜய்), வங்கியிலிருந்து பணத்தைக் கொண்டுபோய்ப் பட்டு வாடா செய்யும் வேலையில் மாட்டிக் கொள்கிறான். பர்மாவை நிழலாகத் தொடரும் மர்ம மனிதர் அந்தப் பணத்தை மடைமாற்றிவிட, விஜி சிக்க லில் மாட்டிக்கொள்கிறான்.
அந்த நிழல் யார், விஜி எப்படிச் சிக்கலிலிருந்து மீண்டு தன் காதலி யின் கடனை அடைக்கிறான் என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறார் புது இயக்குநர் பி. ராஜபாண்டி.
பணத்தை விஜிதான் அடித்து விட்டான் என்று நினைத்து அவனை பர்மாவின் ஆட்கள் அடித்துத் துவைப்ப திலிருந்து தொடங்கும் படம், விஜி அங்கே வந்து சேர்ந்த கதையைச் சொல்கிறது. குப்பத்து இளைஞன் விஜிக் கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மதுவுக்கும் இடையே முளைக்கும் காதலைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இயக்குநர், இது திரைக்கதையில் வேகத்தடையை ஏற்படுத்துவதைக் கவனிக்கவில்லை. இதுபோன்ற காதல்கள் தமிழ்த் திரை யில் பல்லாயிரம் முறை சொல்லப்பட் டவை என்பதையும் அவர் மறந்து விட்டார்.
விஜிக்கும் அவன் அம்மாவுக்குமான (சரண்யா பொன்வண்ணன்) பிணைப் பைச் சொல்வதில் யதார்த்தம் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர். குடித்து விட்டு வந்து அம்மாவை உதைத்து எழுப்பிக் கொஞ்சும் முரட்டுப் பிள்ளை புதுசு. குப்பத்து மனிதர்கள் குறித்த சித்தரிப்பிலும் கவனம் செலுத்தி யிருக்கிறார். ஆனால் படத்தின் ஆதார மான அம்சத்திற்கு இவை எந்த விதத் திலும் பங்களிக்கவில்லை என்பதால் திரைக் கதையின் நேரத்தைக் கடத்தவே இவை பயன்பட்டிருக்கின்றன.
தனி நாயகனாக நடித்திருக்கும் விஜய் வசந்த், கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். அம்மா செத்த பிறகு அழும் காட்சியில் கவனத்தை ஈர்க்கிறார். நாயகி மஹிமா பளிச்சென்று இருக்கிறார். வழக்கம் போல வெள்ளந்தியான பாசத் திரு வுருவ அம்மா வேடம்தான் சரண்யா பொன்வண்ணனுக்கு. சென்னை மொழியைக் கையாளும் விதத்தில் கவர்கிறார்.
ரகுமான், பிரபு ஆகியோர் வழக்க மான வேடங்களில் தோன்றுகிறார்கள். வித்தியாசமான வேடத்தில் தோன் றும் தம்பி ராமையா நன்றாகச் செய்திருக்கிறார். இசை பிரேம்ஜி அமரன். ‘மீச கொக்குதான்’, ‘ஆகா யம்’ பாடல்கள் ரசிக்கும்படியாக இருக் கின்றன. ஒளிப்பதிவாளர் ஏ. வெங்கடேஷின் கேமரா, காட்சிகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட உதவு கிறது.
புதிதாக ஒரு முடிச்சு கிடைக்கிறது. அதற்குக் கொடுக்கப்படும் பில்டப் விவரணைகள் நிமிர்ந்து உட்கார வைக் கின்றன. ஆனால், அதோடு அதை அம்போவென விட்டுவிட்டு மீண்டும் பழைய லாவணிக்குத் திரும்பி நோகடிக் கிறார்கள். ஏகப்பட்ட ஃபிளாஷ் பேக்குகளைக் காட்டிப் பொறுமையைச் சோதிக்கிறார்கள். வங்கிப் பணத்தைச் சுற்றுக்கு விட்டு சம்பாதிப்பது என்னும் முடிச்சை விரிவுபடுத்தும் விதமாகத் திரைக்கதையைச் செதுக்கியிருந்தால் ‘என்னமோ நடக்குது’ ஏதாச்சும் நடந்ததே என்ற ஆறுதலைத் தந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT