Published : 14 Nov 2013 12:43 PM
Last Updated : 14 Nov 2013 12:43 PM
ரஜினி பிறந்த நாளன்று பாடல் வெளியீடு, ஜனவரி 10, 2014ல் படம் வெளியீடு என்று 'கோச்சடையான்' படக்குழு அறிவிப்பு!
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.
'எங்கே போகுதோ வானம்' என்று எஸ்.பி.பி பாடிய பாடல், படத்தின் டீஸர் ஆகியவை வெளியாகி விட்டன. வெளியான டீஸரின் முடிவில் இசை வெளியீடு அக்டோபர் 2013 என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனால், அக்டோபர் மாதம் படத்தின் இசை வெளியீடு நடக்கவில்லை. இதனால் பட வெளியீடு தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று 'கோச்சடையான்' படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று வெளியாகும் என்றும், படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10, 2014ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
ஜனவரி 10ம் தேதி அன்று தான் விஜய்யின் 'ஜில்லா', அஜித்தின் 'வீரம்' ஆகிய படங்களும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT