Published : 25 Mar 2014 12:00 AM
Last Updated : 25 Mar 2014 12:00 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெற்றி பெற வேண்டி, அவரது ரசிகர்கள் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொருளாளர் ரவி திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய திரைப்பட உலகில் முதன்முறையாக போட்டோ , ரியலிஸ்டிக் 3டி அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் கோச்சடையான். இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினி நடித்து வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் ரஜினி ஆரோக்கியத்துடன் வாழவேண் டியும் ஏப்ரல் 2-ம் தேதி வேலூரி லிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல உள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT