Last Updated : 16 Oct, 2013 10:39 AM

 

Published : 16 Oct 2013 10:39 AM
Last Updated : 16 Oct 2013 10:39 AM

கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை!

நடிகர்கள், இயக்குநர்கள் தங்களது படங்களைப் பற்றி, தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்வது வாடிக்கையானது. ஆனால் 'ஆரம்பம்' படத்தினைப் பொருத்தவரை அப்படி எதுவுமே நடைபெறவில்லை.

படத்தலைப்பு பற்றி கூட இப்படத்தில் பணியாற்றியவர்கள் யாருமே தெரிவிக்கவில்லை. எழுத்தாளர்கள் சுபா தங்களது 'ஆரம்பம்' அனுபவங்களை முதன் முறையாக அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

அப்படம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இப்படி ஒரு படத்தை எடுக்க போகிறோம் எனக் கூறியபோது , அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கதையாக உருவெடுத்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு கதைக் கருவை அஜித்திடம் பகிர்ந்துகொள்ள முதன்முதலாக அவரை சந்தித்தபோது அவரது எளிமை எங்களைக் கவர்ந்தது . ஒரு நட்சத்திரத்துக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருந்தது வியப்பூட்டியது. அந்த வியப்பு அடங்கும் முன்னரே அவர் விடுத்த வேண்டுகோள் எங்களை மேலும் வியப்பூட்டியது , அது படத்தில் தன்னைப் புகழும் காட்சிகளோ, வசனங்களோ, பஞ்ச் வசனங்களோ இருக்க கூடாது என்பதுதான் .கதைக்குதான் நாயகனே தவிர நாயகனுக்கு கதை இல்லை என்பதை தெளிவாக வலியுறுத்தினார் .

அவர் தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சியமைப்பை அமைக்குமாறு இயக்குனரிடம் கூறியதை கேட்ட பிறகு தான் அந்த மனிதருக்கு அவர் மீதுள்ள தன்னம்பிக்கையின் அர்த்தம் புரிந்தது . அந்த தன்னிம்பிக்கை அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கும் ஒட்டி கொண்டது என்றால் மிகையாகாது. படத்துக்காக அவர் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான் அவரை இந்த உயரத்துக்கு கூட்டிச் சென்றிருக்கும் எனத் தெளிவாகப் புரிந்தது. நாங்கள் பல நடிகர்களின் படங்களில் பணி புரிந்து இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் இதுவரை எந்த படத்துக்கும் ’ஆரம்பம்’ படத்தை பற்றிய ஆர்வம் போல் கண்டதில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போதுதான் அவருடைய Fan base எந்த அளவுக்கு பரந்து உள்ளது என்பது புலப்டுகிறது. ஏராளமான பொருட் செலவு , விஷ்ணுவின் ஸ்டைலிஷ் இயக்கம் , யுவன் ஷங்கர் ராஜாவின் மெய் மறக்கும் இசை ஆகியவை அந்த எதிர்பார்ப்பை சந்திக்கும் என நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் .உண்டு ஆர்யாவும் அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை,சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அதற்கு இந்த படம் தான் ஆரம்பம்.” என்று தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x