Last Updated : 27 Jun, 2017 09:57 AM

 

Published : 27 Jun 2017 09:57 AM
Last Updated : 27 Jun 2017 09:57 AM

நேர்காணல் | பிள்ளைகள் வியக்கிற உயரத்துக்கு வளர வேண்டும்!- தனுஷ்

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி ஃபக்கீர்’ ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடந்துவரும் படப்பிடிப்பில் அவர் முழுமூச்சோடு பங்கேற்றுள்ளார். இதற்கிடையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக பெல்ஜியத்தில் இருந்து வந்திருந்த தனுஷ் அளித்த நேர்காணல்..

‘வேலையில்லா பட்டதாரி’ 1-ம் பாகத் தில் இருந்து 2-ம் பாகம் எந்த விதத்தில் மாறுபட்டிருக்கும்?

முதல் பாகத்தில் வந்த எனது ‘ரகுவரன்’ கதாபாத்திரம் முதல் என் அப்பா, அம்மா, தம்பி, ஹாரிபாட்டர் நாய்க்குட்டி வரை எல்லா கதாபாத்திரங்களும் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டன. ‘அவர் களை’ அப்படியே விட்டுவிட்டுப் போக மனமில்லை. அதே நேரம், முதல் பாகத்தில் அந்த காதலர்கள் கடைசியில் திருமணம் செய்துகொள்வார்கள்; அம்மா இல்லை. இப்படி அந்தக் கதையை அடுத்த பாகத்துக் குள் சரியாக கொண்டுபோக நிறைய முடிச்சுகள் இருந்தன. அதையெல்லாம் சரிசெய்து எப்படி தொடங்கலாம்னு மன துக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ‘கொடி’ படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் தங்கி யிருந்தபோது, மனதில் திடீரென ஒரு பொறி தட்டியது. அப்போது எழுதியதுதான் விஐபி 2. முதல் பாகத்துக்கும், 2-ம் பாகத்துக்கும் சின்னச் சின்ன ஒற்றுமைகளும், நிறைய வித்தியாசங்களும் இருக்கும். குறிப்பாக, கதாபாத்திரங்களின் உணர்வுகள் இரு பாகங்களையும் இணைக்கிற வகை யில் இருக்கும். 2-ம் பாகத்தில் சமூக விஷயங்களை ஜனரஞ்சகமாக சேர்த்துள்ளோம்.

பாலிவுட் நடிகை கஜோல் நீண்ட இடை வெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்திருக் கிறாரே?

ஆம், அதுவும் இந்தப் படத்தின் முக்கிய மான அம்சம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வர்றாங்க. அவங்க பகுதி ரொம்பவே வித்தியாசமா இருக்கும். பதினாலு, பதினைந்து வயது எனர்ஜியோட நடிச்சிருக்காங்க. அவங் களோட ஆர்வமும், ஆற்றலும் வியக்க வைக்குது. சின்ன வயசுல நான் பிரமித்துப் பார்த்த நடிகை. அவங்களோட சேர்ந்து வேலை பார்த்ததே ஆனந்தமா இருந் தது. அவங்களோட இணைந்து செய் யுற சீன்கள் தினமும் ஒரு சேலஞ்சா இருக்கும்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித் ததற்கும், தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?

ரஜினி சார்கிட்ட இருக்கும் தனித்துவம் அவங்க ரெண்டு பேர்கிட்டயுமே இருக் கிறது. இருவருமே தனக்கென ஒரு அடை யாளத்தை உருவாக்க வேண்டும் என்கிற உணர்வோடு வேலை பார்ப் பவர்கள். கடுமையான உழைப்பாளிகள். பொதுவாகவே, பெண் க்ரியேட்டர்கள் நிறைய பேர் வருவதில் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சி. விஐபி-2 படத்தில்கூட பெண்ணியம் சார்ந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறோம்.

மீண்டும் இரட்டை வேட கதாபாத் திரத்தில் தனுஷை பார்க்க முடியுமா?

கண்டிப்பாக. நல்ல கதை, சூழல் அமை யும்போது நிச்சயம் மீண்டும் தொடுவேன். ‘கொடி’ படம்கூட சற்று சவாலாகத்தான் இருந்தது. பொதுவாக இரட்டை வேடம் என்றாலே குரல், உடல்மொழியில் வித்தி யாசம் காட்டுவோம். அப்படி எதையும் மாற்றாமலே ரெண்டு ரோலையும் செய்து பார்க்கலாமே என்று முயற்சி செய்த படம் ‘கொடி’. அடுத்தடுத்து இரட்டை வேட கதைகள் தேர்வு செய்யும்போது அதிலும் இதுபோல வித்தியாசமான முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆஃப் தி பக் கீர்’ ஹாலிவுட் படம் எந்த நிலையில் உள்ளது?

படத்தின் 50 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. விஐபி-2 படத்தின் இசை வெளி யீட்டு விழாவுக்காகத்தான் மும்பை வந் தேன். பிரசல்ஸில் நடந்துவரும் படப்பிடிப் புக்காக கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஜூலை இறுதிவரை அங்கு படப்பிடிப்பு உள்ளது.

‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எப்போது முடியும்?

‘வட சென்னை’ எங்களுக்கு மிக முக்கியமான படம். படத்தை 3 விதமான பாகங் களாக உருவாக்குகிறோம். அதில் ஒவ்வொரு பாகத்தின் முடிவுக்கும், அடுத்த பாகத் தின் தொடக்கத்துக்கும் சம் பந்தம் இருக்கும். 90 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள் ளன. ‘விசாரணை’ படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பது தொடர் பான வேலைகளில் இயக்குநர் வெற்றி மாறன் மூன்று, நான்கு மாதங்கள் தீவிரமாக இருந்ததால், ‘வட சென்னை’ படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. இன்னும் 15 நாள் படப்பிடிப்புதான் பாக்கி. அதில் நான் வேறொரு கெட்டப்பில் நடிக்க வேண்டும். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜூலை இறுதியில் சென்னை திரும்பியதும், ‘வட சென்னை’யில் கவனம் செலுத்த உள்ளேன்.

நடிப்பு, இயக்கம், கதை, பாடல்கள், ஹாலி வுட் படம் என்று பரபரப்பாக இருக்கிறீர்கள். இந்த உழைப்பு, தொடர் முயற்சிகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

என் பசங்க யாத்ரா, லிங்கா ரெண்டு பேரும்தான் என் முழு ஆற்றலுக்கும் காரணம். அவர்களுக்கு பதினேழு, பதினெட்டு வயசு ஆகும்போது, அவங்க பெருமைப்படுற, வியந்து பார்க்கிற உயரத்துக்கு நான் வளர்ந்திருக்கணும். அதுக்காகத்தான் ஓடிட்டே இருக்கேன்.

‘பவர் பாண்டி-2’ எடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதாமே?

ஆம். கதையும் எழுதி முடிச்சாச்சு. ராஜ் கிரண் சார்கிட்ட சொன்னேன். ‘எப்போ ஷூட்டிங்னு சொல்லுங்க, ஆரம்பிச்சிட லாம்’னு அவரும் அன்போடு சொல்லியிருக் கார். ‘பவர் பாண்டி’ படத்தை ஒரு களத்தில் நின்று இயக்கிவிட்டு, அதே களத்தில் இன்னொரு படமா என்ற கேள்வியும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. பார்க்கலாம். இதற் கிடையே இன்னொரு கதையும் எழுதிட்டிருக்கேன்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பலவிதமான கருத்துகள் கூறப்படுகிறதே?

இசை வெளியீட்டு விழா மேடையிலேயே இதற்கு பதில் கூறினேன். நீங்கள் ஒரு விஷயத்தில் இறங்கும்போது, அதில் உங்களுக்கென்று ஒரு கருத்து இருக்கும். அதேபோல ரஜினி சார் ஒரு விஷயத்தில் இறங்குகிறார் என்றால், அவருக்கென்று ஒரு கருத்து இருக்கும். அதைப் பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்?

‘காலா’ படத்தில் நீங்கள்தான் ஜூனியர் ரஜினியாமே?

அந்த செய்தியை நானும் படித்தேன். அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு ஆசையாதான் இருக்கு. ஆனால், படக் குழுவில் இருந்து யாரும் இதுவரை என் னிடம் அப்படி கேட்கவில்லை. ரஜினி சார் படத்தில, ரஜினியாவே நடிக் கிறதுன்னா வேணாம்னா சொல்லப் போறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x