Last Updated : 20 Nov, 2013 01:36 PM

 

Published : 20 Nov 2013 01:36 PM
Last Updated : 20 Nov 2013 01:36 PM

திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கியது ஜில்லா

பொங்கல் ரேஸில் முதலாவதாக திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கியது 'ஜில்லா'.

'கோச்சடையான்', 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் களம் இறங்கியிருக்கின்றன. இம்மூன்று படங்களில், எதுவுமே பின்வாங்கப் போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

மூன்று படங்களில், முதலாவதாக பொங்கல் வெளியீடு என்று 'வீரம்' களம் இறங்கினாலும், படத்தின் விநியோக உரிமையை தொடங்கியது 'ஜில்லா' தான். 'ஜில்லா' படத்தின் விநியோக உரிமை அனைத்தும் முடிந்து, தற்போது திரையரங்க ஒப்பந்தத்தை தொடங்கிவிட்டார்கள். ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.

'ஆரம்பம்' படத்தின் வசூலால், 'வீரம்' விநியோக உரிமை யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என்று போஸ்டர்கள் வெளியிட்டு வரும் வாரத்தில் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோச்சடையான்' படத்தைப் பொறுத்தவரை ரஜினி பிறந்தநாளன்று வெளியாக இருக்கும் இசை மற்றும் டிரெய்லருக்குப் பிறகே விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x