Published : 18 Nov 2013 02:18 PM
Last Updated : 18 Nov 2013 02:18 PM
பிப்ரவரி 15, 2014 முதல் அஜித் படத்தினை இயக்க இருப்பதாக கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படம் டிராப் ஆனதால், துவண்டு போன கெளதம் மேனனுக்கு கைகொடுத்தார் அஜித். சூர்யா நடிக்கவிருந்த வேடத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கினார் கெளதம் மேனன். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பிப்ரவரியில் அஜித் நடிக்கும் படத்தினை இயக்குவார் என்று அறிவித்தார்கள்.
ஆனால், கெளதம் மேனன் தனது ட்விட்டர் தளத்தில் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தின் தகவலை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் கெளதம் மேனன்.
அதனைத் தொடர்ந்து, “ஒரு வருடம் கழித்து மீண்டும் படம் இயக்கி வருவது சந்தோஷமாக இருக்கிறது. இரவு பகலாக சிம்புவை இயக்கி வருகிறேன். பிப்ரவரி 15 முதல் அஜித்தை இயக்க இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.
அஜித்தை வைத்து இயக்கவிருப்பது 'துருவ நட்சத்திரம்' படமா.. அல்லது சிம்புவை வைத்து இயக்கிவருவது 'துருவ நட்சத்திரம்' படமா என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT