Last Updated : 19 Feb, 2017 02:25 PM

 

Published : 19 Feb 2017 02:25 PM
Last Updated : 19 Feb 2017 02:25 PM

ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே சிறந்த கிளைமாக்ஸ்: ராம் கோபால் வர்மா

சிறந்த இறுதிக்காட்சி ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு 'சசிகலா' என்ற பெயரில் படம் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் ராம் கோபால் வர்மா. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் சசிகலாவைப் பற்றியும், அவருடைய குடும்பத்தினரை பற்றியுல் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ராம் கோபால் வர்மா.

தற்போது மீண்டும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் சின்ன திருடன் அல்ல என சசிகலா சொல்லியிருப்பது சின்ன திருட்டுகளை செய்யும் அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும். சில நூறு ரூபாய்களை திருடுவதை விடுத்து 60 கோடி ரூபாயை அவர்கள் திருட வேண்டும்.பிக் பாக்கெட், சிறிய திருட்டு செய்பவர்கள் சசிகலாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தது 60 கோடி ரூபாயாவது திருட வேண்டும்.

எது பெரிய குற்றம்? வாழ்வுக்காக 600 ரூபாயை பிக் பாக்கெட் அடிப்பதா, இல்லை மக்களின் நம்பிக்கைக்குரியவர்கள் உல்லாசமாக வாழ 60 கோடி ரூபாய் அடிப்பதா? பொதுவாகக் கேட்கிறேன். ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ்ஸுக்கு நடுவில் நடக்கும் நாடகம், ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையாமல் பார்த்துக் கொள்ளும். அவர்களுக்காக ஜெயலலிதா கல்லறையிலிருந்து எழ மாட்டார் என நினைக்கிறேன். தமிழ்நாட்டின் பயங்கரமான, நினைத்துப் பார்க்க முடியாத அரசியல் திருப்பங்களுக்கு சிறந்த கிளைமாக்ஸ், ஜெயலலிதாவின் ஆவி கல்லறையிலிருந்து எழுந்து வருவதே.

ஜெயலலிதா ஏன் இன்னும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார்? ஏன் வெளியே வந்து சசிகலாவை காப்பாற்றவில்லை என நான் நொந்துபோயிருக்கிறேன். ஆன்மாக்களும், கடவுள்களும் அதிக சக்தி வாய்ந்தவர்கள். ஜெயலலிதாவின் சக்திவாய்ந்த ஆன்மா உச்சநீதிமன்ற தீர்ப்பை தடுக்காததன் மூலம் சசிகலாவை ஆதரிக்கவில்லை என்றால் அதற்கு பன்னீர் செல்வம் தான் முதல்வராக வேண்டும் என விருப்பமா?

உயிரோடு இருக்கும்போது வலிமையானவராக இருந்த ஜெ, இறந்த பின் இன்னும் சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும். பின் ஏன் அவர் சசிகலாவுக்காக அக்கறை கொள்ளவில்லை? ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதாலா?" என்று தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x