Published : 22 Apr 2017 10:09 AM
Last Updated : 22 Apr 2017 10:09 AM
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கொண்டாடிய மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியின் மனு மீதான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று ரத்து செய்துள்ளது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து தனுஷின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தனுஷ் எங்கள் மகன் என்பதற் கான சரியான ஆதாரம் எங்களிடம் இருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தோம். தற் போது சரியான தீர்ப்பு கிடைத்திருப் பதில் மகிழ்ச்சி.
இதே கதிரேசன் மீனாட்சி தம்பதி யினரின் மகன் தான்தான் என்று கோவையை சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் சொன்னதாக வார இதழில் பார்த்தேன். அந்த பையனை அவர் கள் ஏன் போய் பார்க்கவில்லை. அவர்களின் திட்டம் தங்கள் மகன் திரும்ப கிடைக்க வேண்டும் என்ப தல்ல. என் மகனை காரணமாக காட்டி மாதம் ரூ.65 ஆயிரம் பணத்தை பெறவேண்டும் என்பதுதான். தனுஷுக்கு விமரிசையாக திருமணம் செய்தபோது தேடி வராதவர்கள், கையில் அடிப்பட்ட செய்தி நாளிதழ்களில் வந்தபோது தேடி வராதவர்கள் இப்போது தேடி வந்ததன் நோக்கம் என்ன என்பது தெளிவாக புரிந்திருக்கும்.
வெங்கடேஷ் பிரபு (தனுஷ்) எங்கள் மகன்தான் என்பதை உறுதி செய்ய வைத்ததே அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த ஆதாரம் தான். அந்த மதுரை தம்பதி தன் மகன் 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் காணா மல் போனதாக தெரிவித்திருந்தனர். தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பை முடித்து அதன் தணிக்கை சான்றிதழ் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் பெறப்பட்டது. படம் 2002-ம் ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆனது. அந்த தேதியில் அவர்களு டைய மகன் வீட்டில் இருந்ததாகத் தான் தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தனுஷ் எப்படி அவர்களது மகனாக இருக்க முடியும். மற்ற ஆதாரங்களை விடுங்கள்? தணிக்கை குழுவினர் வழங்கிய சான்றிதழ் எப்படி தவறாக இருக்க முடியும்.
சாபம் விட்டுடாதீங்க!
இந்த நேரத்தில் ஊடகங்கள் எங் களுக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த பிரச்சினை எழுந்த நாள் முதல் தற்போது நீதி கிடைத்திருக்கும் நாள் வரைக்கும் நான் சற்றும் சலனமில்லாமல்தான் இருந்தேன். தனுஷின் அம்மாதான் கொஞ்சம் வருத்தப்பட்டார். அதேபோல, இந்த பிரச்சினை எழுந்ததும் என் மனைவி யிடம் மகன் தனுஷ் சொன்னது, ‘அம்மா, நீங்க அவங்களை மன்னிச் சுடுங்க. நீங்க ஏதாவது சாபம் விட் டால் அது பலித்துவிடும்!’’ என்றார்.
மேல்முறையீடு
மேல்முறையீட்டுக்கு செல்லப் போவதாக அவர்கள் இப்போது சொல்கிறார்கள். எங்கே போனாலும், உலகத்தில் உள்ள எந்த நீதிமன்றத் துக்கு போனாலும் அங்கே வந்து சந்திக்க தயாராக இருக்கிறோம். பாவம் அவர்கள்தான் கஷ்டப்படப் போகிறார்கள் என்பதுதான் வருத்த மாக இருக்கிறது. இதற்கு பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை.
அவர்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கலாமே என்று கேட் டனர். அடுத்தடுத்து இதே மாதிரி ஆயிரம் பேர் வருவார்கள். அவர் களுக்கு பதில் சொல்லிக்கொண் டிருக்க முடியுமா? தனுஷ் ஒரு நடிகன். அவர் முன் எடுத்து வைக்கும் ஒவ் வொரு விஷயங்களும் செய்தி யாக வருகிறது. அப்படி இருக் கும்போது இந்த விஷயத்திலும் எது உண்மை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற் காகத்தான் தீர்ப்புக்காக காத்திருந் தோம்.
தனுஷ் மீது அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற சர்ச்சைகளை எல்லாம் இந்த சமூகத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதைத்தான் உணர்த்துக்கிறது. இதற்காக நாங்கள் யாரையும் விமர்சிக்க போவதில்லை. அது மீடியாவில் தொழில் செய்பவர்கள் பலருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். பொறாமைக் குணம், வளர்ச்சி பிடிக்காதது, குறுகிய மனப்பான்மை போன்ற எண்ணங்கள்தான் இதற்கு காரணம். எதுவாக இருந்தாலும் நாங்கள் சமாளிப்போம். எங்களை விட தனுஷுக்கு எதையும் எதிர் கொண்டு மேலே வரும் மனப் பக்குவம் மிகவும் அதிகம்.
பெற்ற வயிறு கலங்கியது
தனுஷின் தாயார் விஜயலட்சுமி கஸ்தூரிராஜா கூறும்போது, “தான் சுமந்த பிள்ளையை தன் பிள்ளை என மற்றவர்கள் சொல்வது ஒரு தாய்க்கு எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கும். இந்த வேதனையை நான் கடந்த 8 மாதங்களாக சுமந்தேன். என் மகன் பிரபு (தனுஷ்) பிறந்த சென்னை, எழும்பூர் மருத்துவமனை மருத்துவரே விஷயத்தை கேள்விப்பட்டு, ‘வாங்க போவோம், நான் நீதிமன்றத்துக்கு வந்து சொல்கிறேன்!’ என்றார். இந்த மாதிரி விஷயத்தை கேள்விப்பட்டு ஒவ்வொருவரும் கேட்கும்போது வலி அதிகமாக இருந்தது. பெற்ற வயிறு கலங்கியது. கடவுள் நம்பிக்கை எனக்கு அதிகம். நீதிக்கு மதிப்பளித்தோம். இன்று உண்மை ஜெயித்துள்ளது.
தனுஷ் தன் அப்பா நீதிமன்றதுக்கு போனபோதுகூட பெரிதாக வருத்தப்படவில்லை. என்னை நீதிமன்றதுக்கு வரவழைத்துவிட்டோமே என்ற கவலைதான் அதிகம் இருந்தது. அதுதான் ஒரு தாய் மகனுக்கும் இடையே உள்ள பாசம். யார் மீதும் நாங்கள் தப்பு சொல்லவில்லை. இனிமேலாவது மனசாட்சிப்படி நடந்துகொள்ளட்டும் என்பதுதான் எங்கள் ஆதங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT