Last Updated : 21 Feb, 2014 12:24 PM

 

Published : 21 Feb 2014 12:24 PM
Last Updated : 21 Feb 2014 12:24 PM

28ம் தேதி முதல் வல்லினம்

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த 'வல்லினம்' திரைப்படம், பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

நகுல், மிருதுளா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'வல்லினம்'. 'ஈரம்' இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

2011ல் தொடங்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. 'ஈரம்' படத்தில் தண்ணீரை பின்னணியாக கொண்டு ஒரு பேய் கதையை இயக்கியிருந்த அறிவழகன், கூடைப்பந்து விளையாட்டினை பின்னணியாகக் கொண்டு 'வல்லினம்' இயக்கியிருக்கிறார். நகுல் இப்படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார்.

2013ம் ஆண்டு டிசம்பரில் இப்படம் சென்சார் செய்யப்பட்டு 'U' சான்றிதழ் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'இம்மாத வெளியீடு' என்று விளம்பரப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எப்போது வெளியீடு என்று தகவல் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது 'வல்லினம்' திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x