Published : 28 Feb 2017 10:31 AM
Last Updated : 28 Feb 2017 10:31 AM
திடீரென உடம்பைக் குறைக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை, ‘ராஜா ராணி’ படப்பிடிப்பில் உருவாச்சு. ப்ளாஷ்பேக் பகுதிக்கான காட்சி அது. உடனே குறைக்கணும்னா, சைக்கிளிங்தான் ஒரே வழின்னு இறங்கினேன். இதோ இப்போது நடித்து முடித்துள்ள ‘கடம்பன்’ படம் வரைக்கும் அதுதான் பெரிய பலமாக இருக்கிறது’’ என்கிறார் ஆர்யா.
நடிப்பு பற்றிய பேச்சுக்கு இடையிடையே சைக்கிளிங் பற்றியும் நிறைய பேசினார். ‘கடம்பன்’ பணிகள் முடிந்து அடுத்த படமான ‘சந்தனதேவன்’, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் என்று பரபரப்பாக இருக்கும் ஆர்யாவுடன் ஒரு நேர்காணல்..
நடிப்பு வேலைக்கு இடையே திடீரென ‘சைக்ளோ கஃபே’ குழுவோடு சேர்ந்திருக்கிறீர்களே?
பள்ளி நாட்களில் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தவன் நான். அதோடு டிரா வல் ஆவது அவ்ளோ எளிதான விஷயம் இல்லை. அதுக்கான அர்ப்பணிப்பு, பயிற்சி, ஊட்டச் சத்து இதெல்லாம் ரொம்பவும் முக் கியம். அதுவும் சைக்கிளிங்கை ப்ரொஃபஷனா எடுத்துட்டு 50, 60 கி.மீ. வேகத்துல போறதெல்லாம் தனி கலை. அது இங்கே கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சிட்டு இருக்கு. அதிலும், ‘சைக்ளோ கஃபே’ குழு மாதிரியானவங்க ஐரோப்பா சென்று பயிற்சி பெற்று, அதை இங்கே கொண்டு வர்றது பெரிய விஷயம். நவீன் ஜான் மாதிரி சர்வதேச அளவில் கவனம் செலுத்தும் சைக்கிளிங் வீரரோடு என் பங்களிப்பை செலுத்துவது சந்தோஷமாக இருக்கிறது.
வெளிவர உள்ள ‘கடம்பன்’ படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலை பெரிய அளவில் நடக்கிறது. அதன் தாக்கம், கதாபாத்திரத்துக்கு மெனக்கெட்டிருக்கும் உங்கள் நடிப்பைக் குறைத்துக் காட்டாதா?
சில நேரங்களில் படத்தின் கதைக்களத்துக்கும், கதாபாத் திரத்தின் முக்கியத்துவத்துக்கும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தேவைப் படுது. மலையில 200, 300 அடி உய ரத்தில இருந்து குதிக்கும்போது அதுக்கு ஏற்றமாதிரி பாதுகாப்பு வேண்டும். இயற்கையான சூழ் நிலையில, அதுக்கான பாது காப்பு வசதிகள் செய்யறது கஷ்டம்னுதான், மலையை செட் போட்டு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியோடு எடுக்கிறோம். அதுக் காக நடிப்பை, உடம்பை எதுவும் செய்ய முடியாது. இயற்கையா உள்ளதையும் கிராபிக்ஸையும் தொழில்நுட்ப வசதிகளோடு எப்படி தத்ரூபமா இணைக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியம். அதை சரியாக அமைத்து விட்டால், நமக்கும், சுற்றி யுள்ள கதாபாத்திரங்களுக் கும் எந்த இடையூறும் இருக்காது.
‘பெங்களூர் நாட்கள்’ ரீமேக் படத்தில் நடிப்பதற்கு முன்பே அதன் கதைக்களம், சூழல் எல்லாம் தெரிந்துதான் நடித்தீர்கள். அது சரியாக போகவில்லையே, ஏன்?
ஒரு படம் சரியாக போகாத தற்கு, பல காரணம் இருக்கலாம். ‘இதுதான் காரணம்’ என்று குறிப் பிட்டுச் சொல்ல முடியாது. மலை யாளத்தில் அதை ரசித்தார்கள். தமிழ் மக்களுக்கும் பிடிக்கும் என்று நினைத்து அதில் இறங்கி னோம். ஆனால், இங்கே மிஸ் ஆகிடுச்சு. ஒவ்வொரு பகுதிக்கும் வாழ்வியல் முறையில் சின்னச் சின்ன மாற்றம் இருக்கிறது. திரைப்படங்களையும் அப்படித் தான் தங்களோடு மக்கள் இணைத் துக்கொள்கிறார்கள்.
ஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். விஷால் அணியில் நீங் களும் போட்டியிடுகிறீர்கள். புதிய அணியின் திட்டம் எதை அதிகம் பிரதிபலிக்கும்?
செயற்குழு உறுப்பினர் பத விக்கு நானும் போட்டியிடுகிறேன். தற்போதைய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் நிறைய விஷயம் குறித்து கேட்கிறோம். சரி யான பதில் இல்லை. மலையாளம், கன்னடம், தெலுங்கில் எல்லா விஷயங்களையும் சிறப்பாக செய்கிறார்கள். இங்கே மட்டும் அப்படி நடப்பதில்லை.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மக்கள் படம் பார்த்துவிடு கிறார்கள். அதற்காக, அவர்களை குறை சொல்ல முடியாது. ‘எனக்கு கிடைக்கிறது; பார்க்கிறேன்’ என் பார்கள். நாம்தான் ஒரு கட்டுப் பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதை சரியாக செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று தான் கேட்கிறோம். அதற்கும் பதில் இல்லை. ஒரு சினிமாவை நம்பி இங்கு பலரோட வாழ்க்கை இருக்கிறது. பலர் பாதிக்கப்படு கிறார்கள். அவர்களுக்கு சரியான பாதுகாப்பு வேண்டும். அப்படி பல விஷயங்களை சரிசெய்ய வேண்டும். முதலில் 6 மாதத்துக்கு அதற்கான வேலைகள் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாகும்.
விஷால், த்ரிஷா போன்ற பிரபலங் கள் ட்விட்டரில் இருந்து வெளி யேறுவதும், சில பிரபலங்களின் சமூக வலைதள கணக்கு ஊடுரு வப்படுவதும் சமீபகாலமாக தொடர் கிறதே?
மக்களுக்கு இங்கு தினந் தோறும் ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது. எந்த அரசியல் தலைவராவது சிக்கி னால் நக்கலாக மீம்ஸ் போட்டு மகிழ்கிறார்கள். நடிகர், நடிகை களையும் விடுவதில்லை. ஆனால், எல்லா நேரமும் நடிகர், நடிகை கள் ஒரேமாதிரி இருக்க மாட்டார் கள். த்ரிஷா, விஷால் போன்றவர் களின் மனதை வெகுவாக காயப் படுத்தும் அளவுக்கு சில பதிவுகள் வருகின்றன. இதனால் மனதள வில் ரொம்பவே பாதிக்கப்படு கிறார்கள். ஜாலியாக என்று நினைத்து செய்யும் சில விஷயங் கள் மற்றவர்களை பாதிக்கும் அளவுக்கு போய்விடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் வெளியே வர வேண்டியுள்ளது. இதை மக்கள் தவிர்க்கலாமே.
ஒரு வருஷத்தில் 2, 3, படங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும். சமீபகாலமாக மிகவும் நிதானமாக கதைகளை தேர்வு செய்கிறீர்களே?
‘கடம்பன்’ படத்தின் மேக்கிங் வேலைகளே சுமார் ஓராண்டு காலம் நடந்தது. அதுபோன்ற படங்களில் பணிபுரியும்போது, அதை அப்படியே விட்டுவிட்டு வேறொரு படத்துக்கு இடம்பெயர முடியாது. உடல்மொழி, அதன் தாக்கம் எல்லாம் முழு படத்தை முடிக்கும்வரை தேவைப்பட்டது. இப்போது நடிக்கத் தொடங்கி யுள்ள ‘சந்தனதேவன்’ படமும் அப்படித்தான். மாறுபட்ட களம். இந்தமாதிரி சூழ்நிலையில் நிதானம் ரொம்பவே தேவைப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT