Published : 18 Feb 2017 09:26 AM
Last Updated : 18 Feb 2017 09:26 AM
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது குறித்து கமல் தனது கருத்து தெரிவித்துள்ளார்.
அதிர்ந்துவரும் தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில், தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடக்கிறது.
117 பேர் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி பிழைக்கும் என்ற சூழலில் எடப்பாடி பலப்பரீட்சையை எதிர்கொள்கிறார். தமிழக அரசியல் சூழல் குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருபவர் கமல்.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார் கமல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT