Published : 29 Oct 2014 03:10 PM
Last Updated : 29 Oct 2014 03:10 PM
‘பேட்டி’ என்றால், எப்போதுமே பியாவுக்கு ‘பீட்சா’ சாப்பிடு வது மாதிரி. ‘இந்தப்பக்கம் பதில்கள் தயார்! ‘அந்தப்பக்கம் கேள்விகள் ‘ரெடியா?’ என்று பச்சரிசி பற்கள் பளிச்சிட, கண்களை உருட்டுறார். ‘கோவா’, ‘கோ’ படங்களுக்குப் பிறகு கொஞ்ச காலம் ஓய்ந்திருந்தவர் தற்போது லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி யுள்ள ‘நெருங்கி வா முத்த மிடாதே’ படத்தில் நடித்துள்ளார். மழை ஓய்ந்த ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.
‘கோவா’, ‘கோ’ படங்களுக்குப் பிறகு உங்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?
அடுத்தடுத்து 10 படங்களில் தோன்றுவது பெரிதல்ல. ஒப்பந்த மாகும் ஒவ்வொரு படத்திலும் நம் கதாபாத்திரங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் கதா பாத்திரங்களைத் தேர்ந் தெடுத்து நடித்து வருகிறேன்.
அப்படியென்றால் ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் உங்களுக்கு நல்ல கதாபாத்திரமா?
ஆமாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆபத்தான சூழ்நிலை யில் இருப்பது மாதிரியான கதா பாத்திரம் என்னுடையது. ஆனாலும் அதையெல்லாம் மிகவும் தைரியமாக எதிர்கொள்ளக் கூடிய பெண்ணாக என் கதா பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையே விரியும் ஒரு அற்புதமான உறவை பார்க்க முடியும். என்னுடைய முக்கிய மான படங்களில் இதுவும் ஒன்று.
நீங்கள் ஹாலிவுட் படங்களில் நடிக்கப் போய்விட்டதாக கேள்விப்பட்டோமே?
அது ஹாலிவுட் படம் அல்ல. இந்தியப்படம்தான். பெயர் ‘எக்ஸ்’. அந்தப் படம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தயாராகிறது முதன் முறையாக 11 இயக்குநர்கள் சேர்ந்து இந்தப்படத்தை இயக்குகிறார்கள். நியூயார்க்கில் நடைபெற உள்ள சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட முடிவெடுத்துள்ளனர்.
நீங்கள் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல் தெரிகிறதே?
இதுவரை நான் அப்படி நடித்ததாக தெரியவில்லை. என் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கியூட்டாக இருக்குமே தவிர கிளாமராக ஒருக்காது. ‘கோ’ படத்தில் நடித்த சரோ கதாபாத்திரமும், ‘கோவா’ படத்தில் நடித்த ‘ரோஷினி’ பாத்திரமும் கியூட்டான கதாபாத்திரங்கள்தானே தவிர கிளாம ரான கதாபாத்திரம் இல்லை.
எதை வைத்து உங்கள் படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
முதலாவதாக யார் இயக்குநர் என்று பார்ப்பேன். ஒரு நல்ல கதையை நல்ல இயக்குநரால்தான் நகர்த்திக்கொண்டு போக முடியும். அடுத்ததாக அந்தப் படத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது என்பதை பார்ப் பேன். இவை இரண்டையும் கவனித்து படங்களைத் தேர்ந்தெடுத் தால்தான் நான் திரைத்துறையில் வளர முடியும் என்று நம்புகிறேன்.
சினிமா தவிர உங்களுக்கு வேறு எதில் ஆர்வம் அதிகம்?
எனக்கு சினிமாவைத்தவிற வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் சினிமாவை மட்டும்தான் காதலிக்கிறேன்.
அப்படியென்றால் உங்களுக்கு பொழுதுபேக்கே இல்லையா?
நல்ல புத்தகங்களும், நல்ல நல்ல படங்களும் என்னோட அதிகப் படியான ஓய்வு நேரங்களை தின்றுவிடும்.
அடுத்து?
தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில் நான் நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் நல்ல படங்களை தேர்வு செய்வதில் பிஸியாக நாட்கள் நகர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT