Last Updated : 20 Jun, 2015 11:23 AM

 

Published : 20 Jun 2015 11:23 AM
Last Updated : 20 Jun 2015 11:23 AM

இணையத்தில் வெளியான ’புலி’ புகைப்படங்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ’புலி’ படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே, படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழு ’புலி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் 20ம் தேதி இரவு 12 மணிக்கும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸர் 21ம் தேதி இரவு 12 மணிக்கும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், ’புலி’ கெட்டப்பில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் அப்படங்களை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பதிவு செய்து வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு ’புலி’ படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x