Published : 21 Apr 2017 10:37 AM
Last Updated : 21 Apr 2017 10:37 AM
தன்னைச் சுற்றி வலம் வந்த சர்ச்சைகள் குறித்து துளியும் கவலைப்படாமல் புதுப் பொலிவுடன் ‘அன்புடன் டிடி’ நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சிக்காக கையில் எடுத்துள் ளார், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
‘‘சமீப காலமா பிரபலங்களை நாம் ரொம்பவே கஷ்டப்படுத்துறோம்னு தோணுது. அவங்க ஏதாவது நல்லது செய்ய முயற்சித் தாலும் கஷ்டப்படுத்துறோம். எதுவுமே செய்ய லைன்னாலும் குறை சொல்றோம். இது அடுத்தடுத்து நல்லது செய்யணும்னு நினைக்கி றவங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துது தெரியுமா?”’ என்று ஆதங்கத்தோடு பேட்டிக்குத் தயாரானார், டிடி.
*
‘காபி வித் டிடி’ ஏன் ‘அன்புடன் டிடி’ என்று மாறியது?
நிகழ்ச்சியில ஏதாவது வித்தியாசம் காட்ட ணும்னு ரொம்ப நாட்களாவே உள்ளுக்குள்ள ஓடிட்டே இருந்தது. ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி முழுக்க ஜாலியா இருக் கும். அதையே இன்னும் புது மையா, நிறைய பாசிட்டிவ் விஷயங்களைச் சேர்த்து கொடுக்கணும்னு தோணுச்சு. அதுக்காக ஒரு நல்ல குழுவை தேட நிறைய அவகாசம் எடுத்துக் கிட்டேன். இப்போ அது அழகா அமைஞ்சிருக்கு. சேனல்லயும், ‘நல்ல உழைப்பு!’ன்னு பெயர் வாங்கிட் டோம். நிகழ்ச்சியைப் பார்த்து நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா, அது என்னோட குழுவினருக்கு கிடைத்த வெற்றி. நல்லா இல்லைன்னு சொன்னீங்கன்னா, அது என்னைச் சார்ந்தது. எதுவும் தப்பா ஆகக்கூடா துன்னு ஓடிட்டே இருக்கோம்.
*
சாதாரண தொகுப்பாளினியாக சின்னத் திரைக்குள் வந்த நீங்கள், உங்கள் பெயரிலேயே ஒரு நிகழ்ச்சியின் பொறுப்பை ஏற்போம் என்று நினைத்ததுண்டா?
இது ஓரிரு நாட்களில் கிடைத்தது அல்ல. என்றைக்காவது ஒருநாள் இப்படி ஆவோம்னு நினைத்து வேலை பார்த்ததும் இல்லை. ஒவ்வொரு நாள் வேலையை சரியா செய்யணும். அவ்வளவுதான். இது வேறொருத்தருக்காக செய்யற நிகழ்ச்சியா இருந்தா அந்த இடத்துல அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு இரண்டாவது இடத்தில் இருப்பேன். அதுவே நம்ம நிகழ்ச்சியா இருந்தா, முதல் ஆளா நின்னு எல்லாத்தையும் செய்யணும்னு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே எதையும் நல்லபடியா முடித்தால்தான் நிம்மதியே வரும்.
*
திரைத்துறையில் சாதிக்கும் புதிய திறமைசாலிகளை இந்த நிகழ்ச்சியில் அதிகம் பார்க்க முடிவதில்லையே?
இது மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்கும்போது பொழுதுபோக்கு, பிசினஸ் இரண்டும் ரொம்பவே முக்கியம். இது செய்தி சேனலோ, டிஸ்கவரி சேனலோ அல்ல; பொழுதுபோக்கை கடந்து வெளியே போக முடியாது.
ஒரு பிரபலம் வரும்போது அவர்களை சார்ந்த புதியவர்களையும் அழைத்து வந்து அடையாளம் காட்டவே செய்கிறோம். சமீபத்தில் விஜய் சேதுபதியுடனான சந்திப்பில் கூட இது நடந்தது. வெளியே இருந்து எல்லா வற்றையும் எளிதாக சொல்லிவிடலாம். நல்லதோ, கெட்டதோ எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியை மக்கள் ரசிக்கும் வகையில் பிரதிபலிப்பதாகவே நினைக்கிறேன்.
*
டிடிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும், நீங்கள் வேறொரு தொலைக்காட்சிக்கு போக இருப்பதாகவும் தகவல் வெளியானதே?
எல்லாமே வதந்திதான். காலில் ஒரு சின்ன பிரச்சினை. அதற்காக சில வாரங்கள் ஓய்வில் இருந்தேன். அதற்குள் இப்படி பரவிவிட்டது. ஒவ்வொரு முறை இப்படி ஏதாவது வதந்திகள் வரும்போதும் ‘இதுக்காகத்தான்..!’ என்று விளக்கம் அளிக்கத் தோணுவதில்லை. மற்றபடி ஆல் இஸ் வெல்.
*
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது சினிமா ஆசை வந்திருக்கிறதே?
‘பவர் பாண்டி’ பார்த்தீங்களா? படம் ஓடுச்சா? நல்லா வசூல் ஆச்சா? என் வசனம் பிடிச்சிருந்ததா? அப்புறம் என்ன நடிக்கலாம்தானே? பாசிட்டிவான படம். ‘நீங்கள்.. நீங்களாகவே இருக்கணும்!’னு அமையற கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்காது. அதில் ஏதாவது ஒண்ணு இருக்கணும். அதை இந்தக் கதையை கேட்டப்போ உணர்ந்தேன். முதல் நாள் ஷூட்டிங் போனப்போகூட, ‘இப்படியே ஓடிப் போயிடலாமா?’ன்னு இருந்தது. ஆனால், தனுஷ் சார் என் மேல வைத்த நம்பிக்கை என்னை போக விடலை. என்னை நம்பிய அவருக்கு நன்றி!
*
‘சுச்சி லீக்ஸ்’ உள்ளிட்ட சமீபத்திய சர்ச்சை பற்றிப் பேச மறுக்கிறீர்கள். சரி ஓ.கே. திருமணமானவரான நீங்கள், ‘பவர் பாண்டி’ படத்தில் செல்வி திவ்யதர்ஷினி என்று டைட்டில் கார்டில் போட்டது ஏன்?
வேண்டாம் ப்ளீஸ்... இதைப் பற்றி பேச வேண்டாமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT