Published : 25 Sep 2013 10:06 AM
Last Updated : 25 Sep 2013 10:06 AM
ஆர்யா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். ஒரு படத்தை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப்படுத்தலாம் என்பதில் ‘நிபுணர்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவரைச் சந்தித் தோம்.
இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
"மதுரையில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் நான். பள்ளியில் படிக்கும்போதே டான்ஸ், ஸ்கிட் என கல்சுரல்ஸ் ஆர்வம் அதிகம். சினிமா என்று பள்ளிப்பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதால் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்போது ‘தனிமரம்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ ஆகிய இரண்டு குறும்படங்களை தயாரித்து, இயக்கினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே உதவி இயக்குனராக சேர வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இதற்காக ஷங்கர் சாரை சந்தித்து என் குறும் படங்களைக் கொடுத்தேன். அந்தக் குறும்படங்களைப் பார்த்த அவர் உடனடியாக என்னை உதவி யாளனாகச் சேர்த்துக் கொண்டார். அவரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை செய்தேன்."
ராஜா ராணி உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையா?
"என் வாழ்க்கையில் கொஞ்சம். எனது நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சம், என்னைச் சுற்றி இருப்ப வர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் என்று என் கண் முன்னால் நடந்த விஷயங்களைத்தான் கதையாக்கி னேன். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மா எந்த கல்யாணத்துக்குப் போனாலும் நானும் தொற்றிக் கொள்வேன். அப்படி ஒரு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. இது நடந்த சில மாதங்கள் கழித்து "டேய் அட்லீ… அந்தப் பொண்ணு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டாளம்ப்பா!" என்று ஒருவர் வேதனையோடு சொன்னது என்னை ரொம்பவும் பாதித்தது. நம்மைச் சுத்தி பெரிய பிரச்சனையா ‘காதலும், மணவிலக்கும்’ இருக்கு! அப்படி இருக்கும்போது கதைய எதுக்கு வெளியே தேடணும்னு இதையே எடுத்துகிட்டேன். இதை பிரச்சனையா பேசாம பொழுது போக்கு திரைக் கதைக்குள்ள பிரச்சனைய மறை முகமா பேசியிருக்கேன். ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’
ஆர்யா- நயன்தாராவுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அடித்து விளம்பரம் பண்ணினது சீட்டிங் இல்லையா?
"கண்டிப்பா இல்லை! என்னதான் நாம காவியம் மாதிரி ஒரு படம் எடுத்தாலும் அது மக்கள்கிட்ட போய் சேரலன்னா இயக்குனர் உட்பட ஒரு 200 பேரோட உழைப்பு வேஸ்ட்! தயாரிப்பாளர் பணம் வேஸ்ட்! இந்தப் படத்தோட முதல் காட்சியே கல்யாணத்துலதான் ஆரம்பிக்குது. அதனாலதான் இந்த விளம்பர உத்தியை கையில எடுத்தேன். நயன் தாரா ஆர்யா இரண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் பண்ணி னோம். இப்போ பாருங்க அதுவே பரபரப்பாயிடுச்சு."
நயன்தாராவுக்கு தனிப்பட்ட வாழ்க் கையில ஏற்பட்ட காதல் தோல்விகள் அவர் நடிப்புல எதிரொலிச்சுருக்கா?
"ஷாக்கடிக்கிற கேள்வி. இதுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்ல விரும்புறேன். நான் திட்டமிட்டு இந்தப் படதுக்கு அவங்கள தேர்வு செய்யல. நயன்தாராவிடம் தமிழ்பொண்ணுக்குரிய எல்லா ஹோம்லியும் அவங்ககிட்ட இருக்கு! எல்லாருக்குமான கதைய சொல்லும்போது நயன்தாராதான் சரின்னு முடிவுபண்ணினேன். ஆனா எதிர்பாராம அவங்க நடிச்ச பல சோகக் காட்சிகள்ல நிஜ வாழ்க்கையில் அவங்க சந்திச்ச காதல் தோல்வியோட வலியை கண் முன்னால பார்த்தேன். ஒரு பொண்ணோட மனக்காயம் நிஜமாவே பதிவாகியிருக்கிற காட்சிகளை ரசிகர்களும் பார்க்கப் போறங்க!"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT