Published : 05 Mar 2017 02:35 PM
Last Updated : 05 Mar 2017 02:35 PM
'துருவங்கள் 16' இயக்குநர் கார்த்திக் நரேனை தொலைபேசியில் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும், இயக்குநர் கார்த்திக் நரேனை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் பாராட்டியது குறித்து, "சிறப்பான படம். உணர்ச்சிகளை நீங்கள் கையாண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொலைபேசியில் இதைப் பேசியது இளைய தளபதி விஜய்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்
"Brilliant job man. Really liked the way you treated the emotions. Best wishes for your future".The caller was 'Ilayathalapathy vijay' sir
'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து 'நரகாசுரன்' படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி, நாக சைத்தன்யா நடிக்கவுள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT