Published : 20 Jan 2016 10:25 AM
Last Updated : 20 Jan 2016 10:25 AM

திறமை இருப்பவர்கள் சினிமாவில் ஜெயிக்கலாம்: சேதுபதி இயக்குநர் அருண்குமார் நேர்காணல்

‘பண்ணையாரும் பத்மனியும்’ படத்தின் எதார்த்தமான கதைக்களம் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் அருண்குமார், தற்போது ‘சேதுபதி’ படம் மூலமாக ஆக் ஷன் கதைக்களத்துக்கு திரும்பியிருக்கிறார். அவருடன் பேசியதில் இருந்து..

‘சேதுபதி’ படத்தின் கதைக்களம் பற்றி..

முழுக்க முழுக்க மதுரையில் நடக் கிற ஆக்ஷன் கதை. சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பம் சம்பந்தப்பட்ட கதைக்களம். விஜய் சேதுபதிக்கு இது எதார்த்தமான மாஸ் படமாக இருக்கும். போலீஸ் கதை என்பதற்காக, ரவுடிகள் பறக்கிற காட்சிகளோ, கதையை மீறிய சண்டைக் காட்சிகளோ இதில் கிடையாது. படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.

விஜய் சேதுபதிக்காக என்று இந்த கதையை எழுதவில்லை. நன்கு யோசித்து கதை எழுதி முடித்தவுடன், இதில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்குமே என்று கருதினேன். அவரும் நடிக்க சம்மதித்தார். முழுக்க மதுரையில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். மொத்த படப் பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்துவிட்டோம்.

போலீஸ் கதைகள் நிறைய வந்துவிட்டது. ‘சேதுபதி’யில் ஏதாவது வித்தியாசம் காட்டியிருக்கிறீர்களா?

எனக்கு சொந்த ஊர் மதுரை. அதனால், மதுரை மண் சார்ந்த படங்கள் எடுப்பது எனக்கு பிடிக்கும். இன்னொன்று, மதுரை பின்னணியாகக் கொண்டு இந்த கதையை சொன்னால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. பண்ணினேன். அதற்காக எல்லா படங்களும் மதுரை பின்னணியிலேயே இருக்காது. இப்படத்தின் காட்சி அமைப்பு, கதை சொன்ன விதம் கட்டாயம் மற்ற படங்களில் இருந்து புதுமையாக, வித்தியாசமாக இருக்கும். காதல் கதைகள், போலீஸ் கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், நீங்கள் பார்க்காத போலீஸ் கதையாக இப்படம் இருக்கும்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு பிறகு ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?

இக்கதையை எழுத நான் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது உண்மை தான். ஏனென்றால் எனக்கு இக்கதை யின் களம் புதிது. இதை பண்ணு வதற்கு ஒரு தயக்கமும் இருந்தது. அதில் இருந்து மீண்டு, ‘என்னால் முடியும்’ என்று தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்கு கொஞ்சம் நேரமானது. மேலும், ஒரு புதிய கதையை எழுத ஆரம்பிக்கும்போது, கதைக்கான மெனக்கிடல் அதிகம் தேவை. அப்படி இந்த கதைக்காக நிறைய மெனக்கிட்டு இருக்கிறேன்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருந்ததா?

கண்டிப்பாக இருக்கிறது. எந்த ஒரு படத்தையுமே இந்த அளவுக்கு போகும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதில் இருந்த குறைகளை ‘சேதுபதி’ படத்தில் தவிர்த்திருக்கிறேன். எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாவிட்டாலும்கூட, எப்பவுமே ‘பண்ணையாரும் பத்மினியும்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்தான். அது என் முதல் படம். தவிர, அந்த மாதிரி எளிதான படங்கள் பண்ணுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு குறும்படம் சரியாக எடுத்துவிட்டால் இயக்குநர் ஆகிவிடலாம் என்ற போக்கு தமிழ் திரையுலகில் அதிகரிக்கிறதே..

தமிழ் திரையுலகின் கருப்பு - வெள்ளை காலத்தில் 10 இயக்குநர்கள் கூட இருந்திருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு நிறைய இயக்குநர்கள் வந்தார்கள். அப்போது எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இப்படி அனைவரையும் தாண்டி இயக்குநர்கள் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. பாரதிராஜாவிடம் சேர்ந்தால் பெரிய இயக்குநர் ஆகிவிட லாம் என்று ஒரு காலத்தில் பேச்சு இருந்தது. நீங்கள் சொல்வதும் அந்த ரகத்தை சேர்ந்ததுதான். இப் போது நூற்றுக்கணக்கான இயக்குநர் கள் இருக்கிறார்கள். உதவி இயக்குநர் கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

குறும்படம் பண்ணினால் இயக்கு நராகலாம் என்ற வழியை தமிழ் திரையுல கம் திறந்துவிட்டிருக்கிறது. நிஜமாகவே திறமை உள்ளவர்கள், கதையை தெளி வாக சொல்பவர்கள் ஜெயிப்பார்கள். மற்றவர்கள் அடித்துச் செல்லப்படுவார் கள். அவ்வளவுதான். உதவி இயக்கு நரோ, குறும்படம் எடுத்தவரோ, இயக்குநராக நீங்கள் கதை சொல்லும் விதம் எப்படி இருக்கிறது என்பதுதான் விஷயம். கதை, சினிமா மொழி ஆகியவையும் இருக்கிறது. அதற்கெல்லாம் தயாராகிவிட்டால் படம் பண்ணுவது கஷ்டமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x