Last Updated : 20 Nov, 2013 11:08 AM

 

Published : 20 Nov 2013 11:08 AM
Last Updated : 20 Nov 2013 11:08 AM

நடிகை ஸ்ருதிஹாசன் மீது தாக்குதல்!

கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். தற்போது 'வெல்கம் பேக்' என்ற இந்தி படத்திலும், 'ரேஸ் கெளரம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு நபர் கடந்த ஒரு வருடமாகவே, மும்பையில் ஸ்ருதிஹாசனை பின் தொடர்ந்து இருக்கிறார். 'ராமைய்யா வஸ்தாவய்யா' இந்தி படத்தின் படப்பிடிப்பிற்கு வந்த அந்த நபரை, படக்குழு விரட்டியிருக்கிறது.

நேற்று ஸ்ருதி மும்பையில், வீட்டில் இருந்தபோது, காலை 9:30 அளவில் காலிங் பெல் ஒலித்தது. ஸ்ருதி கதவைத் திறந்துள்ளார். அப்போது அந்த நபர், ஸ்ருதிஹாசனை பிடிக்க முயன்று, வீட்டிற்குள் வர முயற்சித்திருக்கிறார். உடனே ஸ்ருதிஹாசனை வீட்டுக் கதவினை அந்த நபர் முகத்தின் மீது மோதச் செய்து, அக்குடியிருப்பின் காவல்காரருக்கு தெரியச் செய்திருக்கிறார்.

காவலாளிகள் அந்த நபரை, அக்குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாக்குதல் குறித்து ஸ்ருதி ஹாசன், போலீசில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ருதிஹாசன் “நான் நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x