Published : 01 May 2014 02:54 PM
Last Updated : 01 May 2014 02:54 PM
கொழு கொழு பப்ளி பெண்ணாக கோலிவுட்டில் வட்டமடித்துக் கொண் டிருந்த ஹன்ஸிகா, இப்போது ஸ்ருதிஹாசன், சமந்தாவோடு போட்டி போடும் அளவிற்கு ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்டார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டால், பிட்னெஸ் பாடத்தில் ஒரு கோனார் நோட்ஸே கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
அவர் அள்ளித் தெளித்த சில பிட்னெஸ் ரகசியங்கள் உங்களுக்காக:
உடற்பயிற்சி
என் மனதையும் உடம்பையும் எப்பவும் ரொம்பவே இயல்பாக வைத்திருக்க உதவுவது யோகாதான். படப்பிடிப்பு நாட்களில் காலை 5 மணிக்கு எழுந்து குறைந்தது 45 நிமிடங்கள் எளிமையான யோகா பயிற்சியில் இறங்கிவிடுவேன். அதேபோல மாலை நேரங்களில் ஜிம்மில் நேரத்தை செலவழிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஷூட்டிங் இல்லாத நாட்களில் 10 மணிக்குத்தான் எழுந்திருப்பேன். அந்த ஒரு விஷயத்திற்காக அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டே இருப்பேன். அப்படி தாமதமாக எழுந்தாலும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி எடுத்துக்கொள்வேன். முடிந்தவரை 12 மணியிலிருந்து 3 மணி வரையிலான வெயில் நேரத்தில் எங்கும் வெளியில் கிளம்புவதில்லை. அந்த நேர வெயில் முகத்தை கருப்பாக்கி வைத்துவிடுமோ என்கிற பயம்தான் இதற்கு காரணம்.
உணவு
உடம்பை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள தொடங்கியதில் இருந்தே காய்கறிக ளும் பழங்களும்தான் என் நார்மல் உணவாகிவிட்டது. தினசரி கீரை இல்லாமல் மதிய உணவு சாப்பி டுவதே இல்லை. உடம்பை குறைக்க விரும்புகிறவர்கள் சாப்பாட்டை குறைத்தால்தான் நடக்கும் என்ப தெல்லாம் சும்மா... உடல் எடையை அதிக மாக்கும் உணவுகளை தவிர்த்து மற்ற படி எல்லா வகை சாப்பாட்டையும் முழு திருப்தியாகவே சாப்பிடலாம். நேரம் தவறாமல் சாப்பிடுவது, சாப் பாட்டுக்கு நடுவில் இடைவெளி கொடுப்பது உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். எனக்கு சாக்லேட் சாப்பிடு வது கொள்ளைப் பிரியம். ‘இன்னும் வெயிட் போட்டுக்கிட்டே இருக்கப் போற’ என்று பிரண்ட்ஸ் எல்லோரும் கிண்டல் பண்ணினாங்க. இப்போ சாக் லேட் சாப்பிடுவதையே விட்டுட்டேன். தழைச்சத்துள்ள உணவுகள் அதிகம் எடுத்துக்கொள் வேன். நார்மலா தண்ணீர் குடிப்பதைப்போல கேரட் ஜூஸ், பழக் கலவைகள் கலந்த (மிக்ஸட் புருட்ஸ்) ஜூஸ் அடிக்கடி எடுத்துக்கொள்கிறேன். கோடைவெயில் படுபயங்கரமாக தாக்கத் தொடங்கிடுச்சே. மருத்துவர் சொல்கிறார் என்பதற்காக 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் என்று நினைக் காமல் இயல்பாகவே நிறைய தண்ணீர் குடிக்கிற மனநிலைக்கு எல்லோருமே வரணும். நிறைய தண்ணீர், தினமும் ஒரு ஆப்பிள். இது என்னோட கோடை காலத் திட்டம்.
மேக்கப்
பிட்னஸையும் மேக்கப் பையும் தனித்தனி விஷயங் களாக எடுத்துக்கொண்டு கவனம் செலுத்துவேன். நம் உடலில் மிக முக்கிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாகம் முகம். மேக்கப் என்கிற பெயரில் அதிகம் கெமிக்கல் தயாரிப்பு கிரீம் களை வாங்கி அப்ளை செய் வதை எப்பவுமே தவிர்த்துவிடு வேன். எண்ணெய் பசையாகவோ முகம் வறட் சியாகவோ ஆகவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் அலசுவது வழக்கம். நிறைய தண்ணீர் குடிப்பது முகப் பொலி வுக்கும் நல்லது. ஒவ்வொரு விதமான தோலுக்கும் ஒவ்வொரு சன் ஸ்கிரீன் லோஷன் செட் ஆகும். அதை கவனமாக தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அதில் நான் ரொம்பவே ஷார்ப்.
விளையாட்டு
யோகா, ஜிம் பயிற்சியைப்போல விளை யாட்டும் ரொம்ப முக்கியம். பல ஏக்கர் சூழ்ந்துள்ள விளையாட்டு மைதானத் தில் நாள் முழுக்க ஓடி ஆடி விளையாட ணும்னு எனக்கு ஆசை. சினிமா செலிப் ரட்டியானதால அதெல்லாம் முடியலை. ஷூட்டிங் இல்லைன்னா நாள் முழுக்க ஸ்குவாஷ் விளையாட்டுத்தான். ஸ்கு வாஷ் விளையாட்டில் அசத்தி வரும் ஜோஸ்னா, தீபிகா பல்லிகல் போன்ற இளம் வீராங்கனைகளோட போட்டிகளை எல்லாம் மிஸ் பண்ணாம பார்ப்பேன். அந்த விளையாட்டுல நேரம்போவதே தெரியாது. திரில்லா இருக்கும். எப்பவுமே ஸ்குவாஷ் விளையாட்டு என்னோட ஸ்பெஷல்.
ஷூட்டிங் இல்லைன்னா நாள் முழுக்க ஸ்குவாஷ் விளையாட்டுத்தான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT