Published : 16 Feb 2017 09:02 AM
Last Updated : 16 Feb 2017 09:02 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா நேற்று பெங்களூரு கோர்ட் டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன் பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார் இப்படி:
“திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடணுமா வேணாவா? நின்னு நிதானமா
........ கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா, நாயகமா?”
என்று குறிப்பிட்டிருந்தார்.
பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா சபதம் செய்ததை கிண்டல் செய்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் - சசிகலா ஆகியோரிடையே நடந்துவரும் மோதலில் ஏற்கெனவே ஓபிஎஸ்-க்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT