Last Updated : 28 Feb, 2017 02:21 PM

 

Published : 28 Feb 2017 02:21 PM
Last Updated : 28 Feb 2017 02:21 PM

பாலா - ஜோதிகா - ஜி.வி. இணையும் நாச்சியார் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பாலா இயக்கத்தில் ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் இணையும் 'நாச்சியார்' பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார்.

'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாலா. இதில் யுவன் மற்றும் புதுமுகம் பிரகதி நடிக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் தொடங்கப்படவில்லை.

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியானது. இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்ச் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. ஜி.வி.பிரகாஷ் - ஜோதிகா இருவரையும் வைத்து போட்டோ ஷூட் ஒன்றை முடித்தார் பாலா.



x