Published : 08 Apr 2017 12:43 PM
Last Updated : 08 Apr 2017 12:43 PM
மணிரத்னத்தின் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காற்று வெளியிடை'. படம் குறித்த நெட்டிசன்களின் விமர்சனங்கள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
நட்புடன் சுரேசு
'காற்று வெளியிடை' - உயிரை எடுக்கும் போர் விமான பைலட். உயிரை காக்கும் மருத்துவர். இவர்களுக்குள் காதல் வந்தால்?
கார்கில் போர் சூழலில் கதை நகர்கிறது. பல சமயம் நகர மறுக்கிறது. பின்னணி இசையில் ரஹ்மான் அசத்தல். ரவி வர்மனின் ஒளிப்பதிவு குளிர்ச்சி. எல்லாம் இருந்தும் ஏனோ மணி மேஜிக் மிஸ்ஸிங்.
Stalin Navaneetha Krishnan
காற்று வெளியிடை- நீண்ட இடைவெளிக்கு பின் உருக வைத்த திரைப்படம்.
Jackie Sekar
திரைப்படம் நிச்சயம் நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை.. ஆனால் இதயத்தை திருடாதே, அலைபாயுதே பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முக்கியமாக மணியின் எழுத்து வசீகரிக்க வைக்கின்றது.
படம் எப்படி என்று மற்றவர்களிடம் கேட்காதீர்கள்... காதலையும், காமத்தையும், வாழ்வியலையும் ரசிப்பவர்களை நிச்சயம் இந்த திரைப்படம் வசீகரிக்கும் என்பது என் எண்ணம்.
Suresh Adithya
கிரிக்கெட்டிலிருந்து தோனியும், சினிமாவிலிருந்து மணிரத்னமும் ரிடையர்ட் ஆகறது நல்லதுன்னு சொல்கிறது ரசிக புள்ளி விபரங்கள். #ஒரு காலத்துல என்னம்மா அடிச்சு ஆடுனாங்க...!!
Sudharshan Subramaniam
'காற்று வெளியிடை' பார்த்தபோது, "ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே" நாவல் நினைவுக்கு வந்தது. தனது மென்மையால் நாயகனைத் தன்வழிப்படுத்தும் பெண்.
பின்தங்கிய கருத்துகளை விதைப்பதில் தமிழ் சினிமாவின் மசாலா ஹீரோக்களையும் அவர்களின் படங்களையும் விஞ்ச முடியாது. பெண்களை இலகுவாகக் கைநீட்டி அடித்துவிடுவார்கள். சிலநேரங்களில் அதைப் பார்த்தே பெண்களுக்கு காதல் வந்துவிடும். அறிவு சார்ந்த தளத்தில் பெண்கள் பேசவோ தலையிட்டுவிடவோ கூடாது. அவர்களின் கருத்துக்களைக் கூறக்கூடாது.
'காற்று வெளியிடை' இவை அனைத்தையும் வெளிப்படையாகவே பேசுகிறது. அவனுடைய நற்குணங்களை ரசிக்கிற அதேநேரம், பெண் மீதான அடக்குமுறையை ஏற்றுக்கொள்ளாத பெண். படத்தின் ஏனைய விடயங்கள் பிடிக்கவில்லை என்றாலும் இதுபோன்ற கருத்தியல்களை புறக்கணித்துவிடமுடியாது.
Aathmaarthi RS
என்ன தான் ஆச்சு இந்த ஊருக்கு என்று தொடங்கும் சிகரட்டு நிறுத்த விளம்பரம் வருகிற அதே டோனில் என்னதான் ஆச்சு மணி ஸாருக்கு என்று தலையைத் தட்டிக் கொண்டே இருக்கும் உணர்வு.
மஞ்சள் நிலா @Manjall
காற்று வெளியிடை கண்ணம்மா...
யம்மா நல்ல பண்றீங்கம்மா..!
ஆல்தோட்டபூபதி @thoatta
6 விவிஎஸ் லட்சுமணன், 5 புஜாராவ வச்சு டி20 விளையாடினா, என்ன வேகத்துல மேட்ச் போகுமோ, அந்த வேகத்துல படம் ஓடுதாம் #காற்று வெளியிடை
Johnson PRO @johnsoncinepro
நான் - ஏசி தியேட்டரில் கூட குளு குளுன்னு இருக்குது #காற்று வெளியிடை.
ஏழை இளவரசன் @Czsne
பெண்கள் உரிமைகளை தியாகம் செய்யாத அழகிய காதல் கதை.. #காற்று வெளியிடை.
ராஜி @rajalakshmi251
சரட்டு வண்டில...
நம்மூர் கும்மி பாட்டும், வடநாட்டு தாண்டியாவும் கலந்த கலவை. #காற்று வெளியிடை
Suguna Diwakar
அண்ணன் இறந்ததைச் சொல்லும்போது அழகாகச் சிரிக்கிறார் அதிதி. அதிதி இப்படி என்றால் கார்த்தியின் குடும்பமோ இன்னும் வினோதமாக இருக்கிறது. கார்த்தியின் அம்மா, அப்பா, தங்கை, தம்பி என்று எல்லோரும் வினோதமாகப் பேசி, வினோதமாக நடந்து, எதற்கென்றே தெரியாமல் மருத்துவமனையில் சத்தமாகத் திட்டி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். உள்ளே கார்த்தியின் அண்ணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் (ஆனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் அடுத்தவாரம்தான்!) நாமெல்லாம் பிரஸ்மீட்டுக்கு வந்த ஜெ.தீபா போல் பரிதாபமாக விழிக்கிறோம்.
ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தில் ஜெயிலுக்குப் போன வைகோவைப் போல் மௌனவிரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒரு காட்சியில் "நான் மாறுவேன்; உன்னால மாறிடுவேன்" என்பார் கார்த்தி. அதிதியோ "நாம ரெண்டுபேரும் செத்துச் சுண்ணாம்பா மாறிடுவோம்" என்பார் அதிதி. உண்மையில் செத்துச் சுண்ணாம்பாய் மாறுவது நாம்தான்.
வான்...வருவான்...கொல்வான்!
Nelson Antony Raj.c
காற்று வெளியிடை - சிலரால் மட்டுமே ரசிக்க முடியும்.
shan @shanananth
காதலின் முரண் காதலர்களே! #காற்று வெளியிடை
Ajithkumar @ajithsimon
குழந்தை பிறக்கும் போது அண்ணன் கல்யாணம் பண்றான்..
குழந்தைய பள்ளிக்கூடம் அனுப்பற டைம்ல தம்பி கல்யாணம் பண்றான்.. அதுதான் காற்று வெளியிடை.
Muralidharan Kasi Viswanathan
தான் மட்டுமே முக்கியம், தன் விருப்பங்கள் மட்டுமே முக்கியம் எனக் கருதும் நாயகன், சுயமரியாதையை விரும்பும் நாயகி என்ற முரண்பாட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். சில காட்சிகளில் சில பாத்திரங்கள் அதைப் பேசவும் செய்கிறார்கள். ஆனால், முடிவில் கிடைப்பதென்னவோ, தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தும் நாயகனை ஏற்றுக்கொள்ளும் நாயகி என்ற கதைதான். அதுவும், மிக மிக சலிப்பூட்டும் வடிவில்.
மர்ஹபா (வலி Jee) @coolguyvali
காதல்னா என்னனு தெரியனுமா மணிரத்னம் படம் பாருங்க!
காதலை உணரணுமா ரஹ்மான் இசைய கேளுங்க!
இரண்டும் ஒரு சேர வேண்டுமா, காற்று வெளியிடை பாருங்க
v2wit @v2wit
காற்று வெளியிடை பார்க்க தேவையான பொருட்கள்: ரசனை- அரை கிலோ, பீலிங்ஸ்- கால் கிலோ.
Narasimahan Ramakrishnan
மணிரத்னம் படத்தை வெளியானவுடன் விழுந்தடித்து பார்த்து விட்டு, தலையில் வைத்து கொண்டாடுவது அல்லது கழுவி ஊற்றுவது ஒரு ரகம். கூலாக வேறு வேலை பார்ப்பது இன்னொரு ரகம். இதில் நீங்கள் எந்த ரகம்?
மோனிகா யாழினி
காற்று வெளியிடை- காத்துதான் வருது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT