Last Updated : 19 Nov, 2013 05:52 PM

 

Published : 19 Nov 2013 05:52 PM
Last Updated : 19 Nov 2013 05:52 PM

1200 திரையரங்குகளில் இரண்டாம் உலகம்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'இரண்டாம் உலகம்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.வி.பி சினிமாஸ் இப்படத்தினை தயாரித்திருக்கிறது.

மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.

ஆர்யா நடிப்பில், 'ராஜா ராணி', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு, 'இரண்டாம் உலகம்' வெளிவர இருப்பதால் இப்படத்திற்கு முன்பு வெளியான ஆர்யா படங்களுக்கு இல்லாதளவிற்கு எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.

நாயகி அனுஷ்கா என்பதால், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் 'வர்ணா' என்ற பெயரில் வெளியிட இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சேர்த்து சுமார் 1200 திரையரங்குகளில் இப்படம் வெளிவரவிருக்கிறது.

1200 தியேட்டர், மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பதால் படக்குழு எப்படியும் இரண்டு வாரத்தில் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x