Published : 08 Jun 2014 10:38 AM
Last Updated : 08 Jun 2014 10:38 AM
மனித உறவுகள், இயல் பான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத் துவத்தைச் சொல்ல முனை யும் படம் மஞ்சப்பை. கிராமத்திலி ருந்து வரும் ஒரு பெரியவர் சென்னை என்னும் பெருநகரில் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அவரது எதிர்வினைகள், அவரை நகரவாசிகள் எதிர்கொள்ளும் விதம் என்று விரிகிறது திரைக் கதை.
தாய், தந்தை இழந்த தமிழ், தனது தாத்தாவான வேங்கட சாமியின் (ராஜ்கிரண்) அரவ ணைப்பில் வளர்கிறார். சென்னை யில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழுக்குக் கண் மருத்துவப் படிப்பு படிக்கும் கார்த்திகாவுடன் (லட்சுமி மேனன்) காதல் ஏற்படுகிறது. அமெரிக் காவிற்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. பேரன் அமெரிக்கா செல்லவிருப்பதால், கிராமத்தில் இருக்கும் தாத்தா பேரனுடன் சிறிது காலம் இருக்கச் சென்னை வருகிறார்.
தாத்தா வந்துவிட்டதால் எப்போதுமே அவருடன் இருக்கி றான் தமிழ். இதனால் காதலியுடன் சண்டை ஏற்படுகிறது, தாத்தாவின் வெள்ளந்தியான போக்கால் வேறு சில பிரச்சினைகளும் வருகின் றன. அதையெல்லாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் தமிழால், தாத்தாவின் அப்பாவித்தனம் தன் வேலைக்கும் அமெரிக்கப் பய ணத்துக்கும் உலை வைக்கும் போது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாத்தாவை எல் லோரும் புரிந்து கொண்டார்களா, தமிழ் காதலியுடன் சேர்ந்தானா? என்பதுதான் மீதிக் கதை.
மஞ்சப்பை என்பதைக் கிராமத்து விழுமியங்களுக்கான குறியீடாக இயக்குநர் கட்டமைக்கி றார். இயல்பான வாழ்க்கை, எளிமை, சக மனிதர்களிடம் அன்பு, அப்பாவித்தனம், தார்மீகக் கோபம், நியாயத்துக்காகப் போராடும் குணம் ஆகியவையே இயக்குநர் காட்டும் கிராமிய விழுமி யங்கள். கிராமங்கள் பற்றிய இந்தக் கற்பிதங்கள் வெகுஜன சினிமாவில் தொடர்ந்து வலியுறுத் தப்படுகின்றன. இந்த விழுமியங்களுக்கு மாறானதாக நகர வாழ்க்கை காட்டப்படுகிறது. இங்கே எல்லோரும் சுயநலமி கள், பணமே வாழ்க்கை என்று இருப்பவர்கள் என்ப தான பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இவை இரண் டுமே யதார்த்தத்துக்குப் பொருத் தமில்லாத மிகையான சித்தரிப்பு கள். இவற்றை நிறுவுவதற்காக அமைக்கப்படும் காட்சிகளும் மிகையானதாகவே இருக்கும். அப் படித்தான் இருக்கின்றன.
தாத்தா மீது பாசம் வைப் பது வேறு, அவரது அசட்டுத் தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது வேறு என்னும் நடைமுறை அறிவு கூடவா ஒருவனுக்கு இருக்காது. ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து அமெரிக்காவுக்குப் பறக்கும் கனவில் இருப்பவன் தாத்தாவை விடவும் சில விஷயங்களில் அப்பிராணியாக இருக்கிறான். கடற்கரைக்குத் தாத்தாவைக் கூட்டிக்கொண்டு போவது சரி, அமெரிக்கத் தூதரகத்துக்கு எதற்குக் கூட்டிப் போக வேண்டும்? தினமும் அவன் மடியில் வைத்து வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு கருவியை ரொட்டி சுடும் இயந்திரம் என்று நினைத்து அடுப்பில் வைக்கிறாராம் தாத்தா. அமெரிக்கத் தூதரகத்தில் பறக் கும் கொடியைப் பார்த்து வெள் ளையனே வெளியேறு என்று கத்திக் கைதாகிறாராம். உன் தாத்தாதான் என்னைக் காப்பாற்றி னார், அதனால் பிடி விசாவை என்று தூதரக அதிகாரி சொல் கிறாராம். எதற்கும் ஒரு வரை முறை இருக்க வேண்டாமா?
வாழ்க்கைக்கு நெருக்கமான கதையை எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான காட்சிகளுடன், விறுவிறுப்பு குறையாத திரைக் கதையை அமைத்ததில் ஒரு தேர்ந்த இயக்குநருக்கான திறமை அறிமுக இயக்குநர் என். ராகவ னிடம் பளிச்சிடுகிறது. முதல் பாதி யில் வரும் சில சின்னச் சின்னக் காட்சிகளை இரண்டாம் பாதி யின் முடிவில் கனகச்சிதமாக தொடர்புபடுத்துவது பாராட்டத்தக்கது.
வெள்ளந்தியான நடத்தை, குழந்தையின் உற்சாகம், சிறுமை கண்டும் பொங்கும் குணம், பேரனின் நிலை கண்டு அடையும் ஆழ்ந்த சோகம் எனப் பன்முக உணர்ச்சிகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண்.
காதல், நடனம் போன்றவற்றில் விமல் முன்னேற்றம் அடைந்திருந் தாலும், சோகமான காட்சிகளில் இன்னும் தேற வேண்டும். மற்ற படங்களில் இயல்பான அழகாலும் யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர் களை வசீகரித்த லட்சுமி மேனனை இந்தப் படத்தில் காண வில்லை. கேமராவில் படம்பிடிக் கப்பட்ட உணர்வு இல்லாத இயல்பான காட்சிப்படுத்தல் களால் மாசானியின் ஒளிப் பதிவு படத்துக்கு பெரும்பலம். கிராமம், நகரம் என எல்லா இடங் களிலும் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் இயல்பை மீறாத நவீனத் துடன் திறமையைக் காட்டியிருக் கிறார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் மீண்டும் தன் திறமையை நிரூபித்தி ருக்கிறார். ‘பாத்து பாத்து’ பாட லில் நம்மைத் தாளம் போட வைக்கி றார். பின்னணி இசையிலும் ‘ஆகாச நிலவு’ பாடலிலும் இளைய ராஜாவை நினைவுபடுத்துகிறார்.
ஆரம்பத்தில் காமெடியாக நகரும் திரைக்கதை இடை வெளிக்குப் பின்பு சீரியல் பார்க் கும் உணர்வைத் தருகிறது. கிளை மாக்ஸ் காட்சியை இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.
பணம், வசதி ஆகியவற்றைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வேகமான வாழ்க்கையில் அரிய உறவுகளின் அருமையை இழந்து விட்டோம் என்பதை உணர்வு பூர்வமாகச் சித்தரிக்க முயல் கிறது ‘மஞ்சப்பை’. செயற்கை யான காட்சியமைப்புகளைக் குறைத்து இதைச் சொல்லியிருந் தால் நன்றாக இருந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT