Published : 02 Mar 2014 02:39 PM
Last Updated : 02 Mar 2014 02:39 PM
ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், சௌந்தர்யா ஆர். அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான்.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப் படத்தின் இசை மட்டுமின்றி, கோச்சடையான் தெலுங்குப் படத்தின் இசையும் வெளியிடப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது.
இந்த விழாவில், கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைலின் புது மாடலும் வெளியிடப்பட உள்ளது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்ஸரான ஹங்காமா ஆன்லைன் மற்றும் மொபைல் கேம்ஸும் வெளியிடப்பட உள்ளது.
கோச்சடையான் படம் மக்களை சென்றடைய இதுவரை யாரும் செய்திராத புதிய மற்றும் புதுமையான விளம்பர உத்திகளை கையாளத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கோச்சடையான் படத்தின் ஸ்பான்ஸரான கார்பன் மொபைல் உடன் மற்ற ஸ்பான்ஸர்களும் இணைந்து கோச்சடையான் படத்தின் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரத்துக்காக சுமார் 15 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
தென் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்னாடகா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 3650 பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பெட்ரோல் பங்குகளில் கோச்சடையான் படத்தின் ஹோர்டிங் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட உள்ளன.
அதோடு, சென்னையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பர ஹோர்டிங்குகள் வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.
மார்ச் மூன்றாவது வாரத்தில் தணிக்கைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கும் கோச்சடையான் படம் கோடைவிருந்தாக திரைக்கு வருகிறது.
நட்சத்திரங்கள்: ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஆர்.சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் - கலை: வேலு, நடனம்: சரோஜ்கான், சின்னி பிரகாஷ், ராஜுசுந்தரம், உடைகள் வடிவமைப்பு: நீத்தாலுல்லா, சண்டைப்பயிற்சி: மிராக்கிள் மைக்கேல், படத்தொகுப்பு: ஆண்டனி, ஒலிப்பதிவு: ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு மேற்பார்வை: உதயக்குமார், பாடல்கள்: கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, கிரியேட்டிவ் கன்ஸல்டண்ட்: ஆர்.மாதேஷ், இசை: ஏ.ஆர்.ரஹ்மான், கதை, திரைக்கதை, வசனம்: கே.எஸ்.ரவிக்குமார், இயக்கம்: சௌந்தர்யா ஆர். அஷ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT